“பார்த்ததுமே நாக்கு எச்சில் ஊரும் தேங்காய் அல்வா..!” – நீங்களும் செய்யலாம்..!

அல்வா என்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கும். அது மட்டும் அல்லாமல் யாருக்காவது எதையாவது தர மறுப்பவர்களுக்கும், தருவது போல் பேசி தராதவர்களுக்கும் அல்வா கொடுத்திட்டிங்களா? என்று நக்கலாக கேட்போம்.

மேலும் இந்த அல்வாவில் கோதுமை அல்வா, மஸ்கோத் அல்வா, திருநெல்வேலி அல்வா, கேரளா அல்வா, அத்திப்பழ அல்வா என இப்படி பல வகைகளை நாம் அடித்துக் கொண்டு போகலாம். அந்த வரிசையில் இன்று தேங்காய் கொண்டு தேங்காய் அல்வா எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 

தேங்காய் அல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள்

1.தேங்காய் துருவல் இரண்டு கப்

2.நெய் 6 டீஸ்பூன் 3.காய்ச்சிய பால் இரண்டு கப்

4.முந்திரி பருப்பு பத்து

5.சர்க்கரை 150 கி

செய்முறை

முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு நெய்யை ஊற்றி லேசாக சூடு ஆனவுடன் அதில் முந்திரியை போட்டு பொன் நிறமாக வறுத்து தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து கடாயில் தேங்காய் துருவலை சேர்த்து பொன் நிறமாக வறுத்து விட்டு அதனோடு காய்ச்சிய பாலையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

இப்போது தேங்காய் மற்றும் பால் சூடாகி வரக்கூடிய நிலையில் அதனோடு தேவையான அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் இளகி கெட்டியாகும் வரை சூடாக்கவும்.

இந்தக் கலவை கட்டியான பிறகு மீண்டும் தேவையான அளவு நெய்யை ஊற்றி நன்கு கிளற வேண்டும். இதனை அடுத்து நீங்கள் பௌலில் தனியாக எடுத்து வைத்திருக்கும் வறுத்த முந்திரியை போட்டு இதனோடு சேர்த்து விட்டு மீறி இருக்கும் நெய் முழுவதையும் அதனோடு சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

இப்போது அடுப்பை அணைத்துவிட்டு உங்கள் தித்திப்பான தேங்காய் அல்வாவை குடும்பத்தோருடன் இணைந்து சாப்பிடுங்கள். சுவை சூப்பராக இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …