” தூக்கி வீசும் தேங்காய் தொட்டியில் கீரை வளர்ப்பு..! – எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாங்க..!!

வீட்டில் இடமில்லை, மாடியே இல்லை என்று நினைப்பவர்கள், நீங்கள் தூக்கி எறிய கூடிய தேங்காய் தொட்டியில் மண்ணை நிரப்பி கீரை வளர்ப்பு மற்றும் புதினா மல்லி போன்றவற்றை உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன இடத்தில் வளர்த்து பயனடையலாம்.

 இதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான நஞ்சில்லாத கீரை வகைகள் மற்றும் புதினா கொத்தமல்லியை உங்கள் வீட்டிலிருந்து பெறுவதன் மூலம் உங்கள் சமையலில் இன்னும்  கூடுதலாக மணம் சேர்க்க முடியும்.

தேங்காய் தொட்டியில் கீரை வளர்க்கும் முறை

 நீங்கள் தூக்கி எறியக்கூடிய தேங்காய் தொட்டியை நன்றாக கழுவி விட்டு அதில் தேங்காய் மஞ்சையை சிறிது சிறிதாக வெட்டி போட்டு அதோடு செம்மண் கலந்து தொட்டியில் போட்டுக் கொள்ளவும்.

 பிறகு இதில் கீரை விதைகளை வாங்கி தூவி விட்டு சிறிதளவு நீரை தெளித்து விடுங்கள் குறைந்தது ஒரு வாரம் இரண்டு வார இடைவெளிகளில் நீங்கள் விதைத்த கீரை முளைவிட்டு வளரத் தொடங்கும்.

 இந்த சமயத்தில் நீங்கள் சிறிய அளவு நீரை தெளித்தாலே போதுமானது ஏனென்றால் இந்த மண்ணில் நீங்கள் தேவையான அளவு தேங்காய் நார் துண்டுகளை போட்டு வைத்திருப்பதால் தேவையான ஈரப்பதத்தை அதை தக்க வைத்துக் கொள்ளும்.

 மேலும் வீட்டில் நீங்கள் காய்கறிகளை நறுக்கும்போது ஏற்படும் கழிவுகளை வெளியே தூர போடாமல் ஒரு இடத்தில் இதுபோன்று மண்ணில் கொட்டி வைத்து விடுங்கள்.

 அது மக்கிய பின்பு அந்த மண்ணை சிறிதளவு எடுத்து நீங்கள் தொட்டியில் போட்டு இது போல உள்ள ஸகீரை வகைகளை வளர்க்கலாம்.

மேலும் இரண்டு வாரங்களுக்கு பிறகு இதை அறுவடை செய்து உங்கள் வீட்டில் நீங்கள் சமைக்கும் போது நஞ்சில்லாத ஆரோக்கியமான உணவு உங்களுக்கு கிடைக்கும்.

இனி மேல் இடம் இல்லையே என்று கவலைப்படக்கூடிய நபர்கள் இதுபோல தேங்காய் தொட்டிகள் மற்றும் இளநீர் தொட்டிகளில் இந்த வழியை ஃபாலோ செய்து சின்ன சின்ன செடிகளை வளர்க்க முடியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …