ஒரு ஸ்பூன் காபி தூள் போதும்..! – உங்க முகம் சும்மா பளபளன்னு ஆகிடும்..! – வாங்க பாக்கலாம்..!

உங்கள் முகத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதைப்பற்றி  இனி நீங்கள் கவலையை படவேண்டிய அவசியமில்லை. இதனை சரி செய்ய அங்கு, இங்கு என்று எந்த ஒரு பியூட்டி பார்லருக்கும் சென்று பணத்தை விரயம் செய்ய வேண்டாம்.  உங்கள் வீட்டில் இருக்கும் காபி தூளை வைத்தே உங்கள் முகத்தை காபி மாஸ்க் பயன்படுத்தி எளிதில் பிரகாசமாக மாற்ற முடியும்.

மேலும் இந்த காபி தூளில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் உங்கள் முகத்திற்கு தேவையான அற்புதமான ஆற்றலை தருவதால் உங்கள் முகம் பளபளப்பாக ஜொலிக்கும் இதற்காக நீங்கள் தினமும் இந்த காபி மாஸ்கை பயன்படுத்தினாலே போதும்.

காபியில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் இது முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்றி சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி செய்கிறது.

உங்கள் முகத்தில் அதிக அளவு கரும்புள்ளிகள் இருந்தால் அந்த கரும்புள்ளிகளை குறைக்க கூடிய ஆற்றல் எந்த காபி தூளுக்கு உள்ளது. மேலும் நீர்க்கட்டிகள் ஏதேனும் இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய அளவு எந்த காபித்தூள் உங்களுக்கு சிறப்பாக பயனைத் தரும்.

 மேலும் இதில் புற ஊதா கதிர்களில் இருந்து ஏற்படக்கூடிய சரும பக்கவிளைவை தடுத்து நிறுத்த கூடிய ஆற்றல் இருப்பதால் சருமத்தில் இருக்கும் மெலனின் நிறமியை குறைப்பதால் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய கருந்திட்டுகள், கருப்பு புள்ளிகள் விரைவில் மாறி வெண்மையாக ஜொலிக்க முடியும்.

 காபி மாஸ்க் தயாரிக்கும் முறை

ஒரு ஸ்பூன் காபித்தூள் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் எந்த மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மிக்ஸை நீங்கள் உங்கள் முகத்தில் நன்றாக தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். மேலும் இந்த மாஸ்க் நன்றாக காய அரை மணி நேரம் எடுத்தாலும் பரவாயில்லை.

 அப்படியே விட்டுவிட்டு அது காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை சுத்தப்படுத்தவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் மீண்டும் ஒருமுறை உங்கள் முகத்தை நன்றாக கழுவி காட்டன் துணியால் துடைக்கவும்.

கடைசியாக நீங்கள் மாய்ஸ்ரைசரை பயன்படுத்துவீர்கள் என்றால் சிறிதளவு மாய்ஸ்ரைசரை உங்கள் முகத்திற்கு அப்ளை செய்து நன்கு தேய்த்து விடவும்.

 இதுபோல நீங்கள் வாரம் இரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் திட்டுக்கள், கரும்புள்ளிகள் அடியோடு அழிந்து வெண்மை நிறமாக மாறிவிடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam