தங்கலான்.. டிமாண்டி காலனி.. ரகு தாத்தா படங்களின் முதல் வார வசூல்..!

இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகின்ற வேளையில் தென்னிந்திய சினிமா உலகில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளி வந்த படங்களில் எந்த படம் அதிக வசூலை வாரி தந்தது. எந்த படம் எதிர்பார்ப்புகளை தவிடு பொடி ஆக்கியது என்பது போன்ற விவரங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சுதந்திர தினத் திருநாளன்று வெளி வந்த திரைப்படங்களில் மூன்று முக்கிய திரைப்படங்களாக பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான், டிமான்டி காலனி 2, ரகு தாத்தா போன்ற படங்களை சொல்லலாம்

தங்கலான்..

சியான் விக்ரம் நடிப்பில் பசுபதி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து பா ரஞ்சித்தின் இயக்கம் மற்றும் கதை அம்சத்தில் வெளிவந்த தங்கலான் படமானது ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தது.

இந்தப் படத்தின் கதை சற்று சுதப்பி உள்ளதாக ரசிகர்களின் மத்தியில் பல்வேறு வகையான விமர்சனங்கள் இருந்தாலும் படத்தை மிக நேர்த்தியான முறையில் எடுத்துச் செல்லக் கூடிய வகையில் விக்ரம் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததாக பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் ரசிகர்களின் ஆதரவு பெற்ற படங்களில் ஒன்றாக தங்கலான் படம் இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் மாளவிகாவின் நடிப்பும் பேசும் பொருள் ஆகியுள்ளது.

இதனை அடுத்து தங்கலான் படமானது படம் வெளிவந்த இரண்டு நாட்களில் சுமார் 35 கோடி ரூபாயை வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸ் கிட்ட கொடுத்து உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளி வந்துள்ளது.

டிமாண்டி காலனி 2..

டிமான்டி காலனி 2 திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் கதையின் நகர்வு சுவாரசியமாக இருப்பதாக ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள். இந்தப் படத்தை ஆர் அஜய் ஞானமுத்து இயக்கியதை அடுத்து ரசிகர்கள் விரும்பும் படங்களில் ஒன்றாக இந்த படம் மாறி உள்ளது.

மேலும் படத்திற்கு பக்க பலமாக அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பு உள்ளதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் ஒவ்வொரு காட்சியும் திகில் நிறைந்த திரில்லர் படம் என்பதை உறுதி செய்து இருப்பதாக சொல்லி விட்டார்கள். மேலும் இந்த படமானது சுமார் 10 கோடி ரூபாயை வசூல் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

அத்தோடு இனி வரும் நாட்களில் இதன் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.

ரகு தாத்தா..

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷின் படங்கள் யாவும் பிளாப்பான நிலையில் இந்த ரகு தாத்தா திரைப்படமானது கீர்த்தி சுரேஷின் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்த படங்களில் ஒன்றாக இருந்தது. எனினும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி இந்த திரைப்படம் இல்லை என்ற மோசமான கருத்து விமர்சனங்களை ஒரு பக்கம் பெற்றுள்ளது.

எனினும் இந்த படத்தின் வசூலை பார்க்கும் போது தங்கலான் படம் மற்றும் டிமான்டி காலனி 2 போன்ற படங்கள் செய்த வசூலை செய்யாமல் வெறும் 35 லட்சம் மட்டுமே வசூலித்திருப்பதாக செய்திகள் வந்திருப்பதை அடுத்து இனி வரும் நாட்களில் இடம் வசூல் அதிகரிக்குமா? என்பது சந்தேகமாக தான் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

படங்களின் முதல் வார வசூல்..

இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் வார வசூல் ஆனது தங்கலானை பொருத்தவரை சுமார் 35 கோடியும், டிமான்டி காலனி 2 -யை பொருத்தவரை 10 கோடி ஆகும்.இதில் ரகு தாத்தா வெறும் 35 லட்சத்தை வசூல் செய்துள்ள விவரம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இதனை பேசும் பொருளாக்கி ரசிகர்களின் மத்தியில் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version