அப்பாடா வந்துட்டாங்க அம்மா… வந்துட்டாங்க மீண்டும் எமிஜாக்சன் வந்துட்டாங்க….

ஆங்கில பெண்ணான எமி மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்காக   லண்டனில் இருந்து வந்துவிட்டார். இவர் 2010 ஆம் ஆண்டு  வெளியான மதராசப்பட்டினம்  என்ற வரலாற்று படத்தில் ஆங்கில பெண்ணாக நடித்தார். இதன் மூலம் நல்ல பெயர் கிடைத்தது.இவர் தமிழ், தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தத்தில் 15 படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் லண்டனில் ஒரு மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழ்ந்தவர். இளம் வயதினருக்கான உலக அழகி போட்டியில் முதல் பரிசு பெற்றவர். எமி ஜாக்சன் தமிழில் தாண்டவம், தெறி, கெத்து, தேவி போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக டூ பாயிண்ட் ஜீரோ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு சரி படவாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் மீண்டும் தனது சொந்த ஊரான லண்டனுக்கு சென்றுவிட்டார். 

லண்டனில்  திருமணம் செய்யாமலேயே தன் காதலனுடன் குடும்பம் நடத்தி பிள்ளையும்  உள்ளார். 

இவரை தமிழ்த் திரையுலகில் முதன் முதலாக அறிமுகம் செய்து வைத்த ஏ.எல்.விஜய் என்ற இயக்குனர் தான் அடுத்தாக  இயக்கயிருக்கு படத்தில் இவரையே கதாநாயகியாக நடிக்க வைக்க மீண்டும் அம்மணியை தேடிப்பிடித்து லண்டனில் இருந்து அழைத்து வந்துள்ளார். 

இயக்குனர் ஏ.எல்.விஜய்  2007ஆம் ஆண்டு கிரீடம் 2008ஆம் ஆண்டு பொய் சொல்லப் போகிறோம் 2010ஆம் ஆண்டு மதராசபட்டினம் 2011ம் ஆண்டு தெய்வத்திருமகள் 2012ஆம் ஆண்டு தாண்டவம் 2013ஆம் ஆண்டு தலைவா போன்ற படங்களை எடுத்தவர். நடிகை அமலாபாலின் முன்னாள் கணவரும் கூட.

இவர் 2015ஆம் ஆண்டில் இது என்ன மாயம் என்ற படத்தில் விக்ரம் பிரபு கீர்த்தி சுரேஷ் காவியா ஷெட்டியை வைத்து இயக்கியிருந்தார். இவர் இயக்கிய மதராசப்பட்டினம் மற்றும் தெய்வத்திருமகள் ஆகிய இரண்டு படங்களுமே பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட படங்களாகும்.

இனி இவர் இயக்க உள்ள இந்த படம் பற்றிய முழுமையான விவரங்கள் அனைத்தும் முறையாக வெளிவரும் என்று கருதப்படுகிறது. படத்தின் கதாநாயகனாக அருண்விஜய் நடிப்பார் என்று தெரிகிறது. எமி ஜாக்சனின் நடிப்பை ரசிகர்கள் காட்டாயம் காத்திருந்து பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …