கவுண்டமணி குறித்து பலரும் அறியாத 10 மர்மங்கள்..

தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத காமெடியனாக வலம் வந்த கவுண்டமணி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவரும் நடிகர் செந்திலும் இணைந்து நடித்த வயிறு குலுங்க அனைவரும் சிரிக்கலாம்.

இதையும் படிங்க: சீரியலில் மட்டும் தான் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் சன்னிலியோனை மிஞ்சும் மான்யா ஆனந்த்..!

இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது அற்புதமான திறமையை வெளிப்படுத்தியதோடு இவர் இந்த பெயரை பெற காரணமாக இருந்தவர் பாக்யராஜ் தான் என்று அண்மையில் இணையங்களில் செய்தி வெளி வந்ததை நீங்கள் படித்திருக்கலாம்.

காமெடி நடிகர் கவுண்டமணி..

நடிகர் கவுண்டமணி கோவை மாவட்டத்தில் இருக்கும் உடுமலைப்பேட்டைக்கு அருகில் இருக்கும் வல்ல கொண்டாபுரம் எனும் சிற்றூரில் பிறந்தவர். இவருடன் ஒரு சகோதரியும் இருக்கிறார்.

ஆரம்ப நாட்களிலேயே பள்ளி படிப்பில் ஈடுபடாத இவர் ஊர் கவுண்டர் நாடகத்தில் சுப்பிரமணி அருமையாக நடித்திருக்கிறார். கவுண்டர்கள் எப்படி பேசுவார்களோ அது போல ஏற்ற இறக்கத்தில் பேசி நடித்திருக்கிறார். இன்று முதல் சுப்பிரமணியை கவுண்டமணி என்று அழைப்போம் என்று அவரை கவுண்டமணி என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

மேலும் இவரை அனைவரும் கவுண்டமணி என்று சொல்லி வந்ததை அடுத்து சுருக்கமாக மணி என்று கூறியதோடு யார் பேசினாலும் அதற்கு கவுண்டர் கொடுத்து பேசி வந்ததால் கவுண்டர் மணி என்று அழைத்தார்கள். இது பின்னாளில் பாக்யராஜின் மூலம் கவுண்டமணி என மாறியது.

இயல்பாகவே மெதுவாக பேசக்கூடிய குணம் கொண்ட இவர் படங்களில் காது கிழிய டயலாக்கை பேசி அசத்துவார். நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் சென்னைக்கு வந்து அங்கு இருக்கும் நாடக கம்பெனிகளில் நடிக்க ஆரம்பித்தார்.

கவுண்டமணி குறித்து அறியாத 10 மர்மங்கள்..

இவர் முதல் முதலாக நாகேஷ் நடித்த படத்தில் 26 ஆவது வயதில் திரையில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் வசனங்கள் ஏதும் பேசாமல் கூட்டத்தில் வந்து போகும் ஒருவராக நடித்திருப்பார்.

மேலும் சிவாஜி நடிப்பில் வெளி வந்த ராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் தனது முதல் வசனத்தை பேசி நடித்திருக்கிறார். மேலும் இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளி வந்த 16 வயதினிலே என்ற படத்தில் என்ற வசனத்தை பேசி பிரபலமானார்.

இதனை அடுத்து பல படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது குடும்பத்தை மீடியாவில் காட்ட விரும்பாத இவர் இரண்டு பெண்களுக்கு தந்தையாக விளங்குகிறார்.

இது வரை 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடி கூடிய கவுண்டமணி செந்தில் உடன் இணைந்து சுமார் 450-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பது உலக சாதனை ஆகும்.

இவர்கள் இருவரும் இணைந்து கரகாட்ட காரன் படத்தில் செய்த வாழைப்பழ காமெடி இன்று வரை எவராலும் மறக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் கருப்பு நிறத்தவரையும், சொட்டை தலையோடு இருப்பவர்களையும் ஒதுக்கிய சினிமா கவுண்டமணியின் மூலம் அது போன்ற நிறம் உடைய நபர்களுக்கு வாய்ப்பை தந்தது என்று கூட சொல்லலாம்.

அட இவ்வளவு இருக்கா..

பட பூஜைகளுக்கு கருப்பு நிற ஆடையை அணிந்து செல்லக்கூடிய இவர் யாராவது கேட்டால் இங்கிலீஷ் கலருடா பிளாக் என்று தைரியமாக சொல்லுவார். தனது பெயருக்கும் முன்னும் பின்னும் எந்த பட்டங்களும் போட்டுக் கொள்ள மாட்டார். குடிப்பழக்கம், சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் கிடையாது. தனது வீட்டு பிறந்தநாளுக்கு கூட யாரையும் அழைக்க மாட்டார்.

இப்படி ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்டால் என்னடா சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாது என்று நச்சென்று கூறுவார். சத்யராஜ் மணிவண்ணன் போன்ற ஒரு சில நண்பர்களைத் தவிர வேறு எந்த நண்பர்களும் இவருக்கு அதிகம் கிடையாது.

ஏனென்றால் மனதில் படுவதை பட்டு என்று பேசிவிடும் குணம் கொண்டவர்.மீடியாக்களுக்கு அதிக அளவு பேட்டியை கொடுக்க விரும்பாத கவுண்டமணி.

பொதுமக்களிடையே தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவார். அந்த காலத்தில் ஹீரோக்களை வாங்காத கார்களையும் ஏராளமான கடிகாரங்களையும் கூலிங் கிளாசையும் தன் வீட்டில் வாங்கி சேகரித்து வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: நிஜமாவே என் மகனா..? என DNA டெஸ்ட் பண்ணேன்.. இது தான் காரணம்..? அப்பாஸ் பகீர் தகவல்..!

நக்கல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத நபர் என்றால் அது மிகையாகாது இப்போது உங்களுக்கு கவுண்டமணி பற்றி பலரும் அறியாத அந்த 10 உண்மைகள் என்னென்ன என்பது தெரிந்திருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version