முன்னணி காமெடி நடிகருடன் அப்படியொரு உறவு.. ரகசியமாக திருமணம் செய்து கொண்ட தேவயானி..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கொஞ்சம் டீசண்டான உடை அணிந்து நடித்து வந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தேவயானி. தேவயானிக்கு என்று அப்பொழுது ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வந்தது. தேவயானிக்கு திரைத்துறையில் அவரது மார்க்கெட்டை உயர்த்திவிட்ட திரைப்படம் என்றால் அது சூரியவம்சம்தான்.

விக்ரமன் திரைப்படத்தில் உருவான சூர்யவம்சம் ஒரு சாதாரண குடும்ப கதையை கொண்ட திரைப்படமாக இருந்தாலும் அதில் தேவயானிதான் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தார். சொல்ல போனால் அந்த படத்தில் கதாநாயகனாக வரும் சரத்குமாரை விடவும் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக தேவையானியின் கதாபாத்திரம் இருந்தது.

அதுதான்  சரத்குமாரை உயர்த்திவிடும் ஒரு கதாபாத்திரமாக படத்தில் இருந்தது. இந்த திரைப்படத்தை விக்ரமன் இயக்கி வந்த காலகட்டத்தில் அந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவரதான் ராஜகுமாரன்.

தேவயானி காதல்:

அப்பொழுதிலிருந்து ராஜகுமாரனை காதலித்து வந்தார் தேவயானி. அதற்குப் பிறகு ராஜகுமாரன் தேவயானியை கதாநாயகியாக வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் விக்ரம் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அப்படியும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து வந்ததை பார்த்து சரத்குமாரே கோபமானார் என்று ஒரு பேச்சு உண்டு. அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஆனால் தொடர்ந்து அவர்களது வீட்டில் இதற்கு எதிர்ப்பு எழுந்து வந்தது எதனால் வேறு வழி இன்றி திரைப்படங்களில் வருவது போலவே அவர்களும் வீட்டை எதிர்த்து சென்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கும் சரி விக்ரமணிடம் ராஜகுமாரன் உதவி இயக்குனராக சேர்ந்த போதும் சரி.

நடிகர் செய்த உதவி:

அதற்கு முக்கிய ஆளாக பின்புலத்தில் இருந்தவர் காமெடி நடிகர் சிங்கமுத்துதான். ஏனெனில் இவர்தான் இயக்குனர் விக்ரமணிடம் ராஜகுமாரனை உதவி இயக்குனராக சேர்த்து விட்டார். அதேபோல தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கும் திருமணம் நடக்கும் பொழுது அங்கு சாட்சி கையெழுத்து போட்டவரும் நடிகர் சிங்கமுத்துதான்.

அந்த அளவிற்கு ராஜகுமாரனின் வாழ்க்கையில் முக்கியமான நபராக சிங்கமுத்து இருந்திருக்கிறார் இந்த தகவல் நெட்டிசன்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கும் தகவலாக இருந்து வருகிறது. ஏனெனில் இவர்களது வாழ்க்கையின் பின்புலத்தில் சிங்கமுத்து இவ்வளவு முக்கிய நபராக இருப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version