தமிழ் திரை உலகில் மனோரமா ஆச்சிக்குப் பிறகு காமெடி ட்ராக்கில் கலக்கிய நடிகைகளில் மிகச் சிறப்பான நடிகையாக இன்று வரை ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கும் கோவை சரளா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் சாதித்து வரும் பெண்களில் ஒருவர் என்று சொல்லலாம். அத்தோடு இது வரை சுமார் 750 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல்வேறு விருதுகளைப் பெற்று இருக்கிறார்.
நடிகை கோவை சரளா..
நடிகை கோவை சரளா 1983 ஆம் ஆண்டு முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் அசத்தலான நடிப்பில் துணை கதாபாத்திரங்களை செய்ததோடு காமெடியில் கலக்கியவர்.
பெண் காமெடி நடிகைகளின் வரிசையில் ஒருவராக திகழும் இவர் கொங்கு தமிழ் பேசி அனைவரையும் ஈர்த்துவிடுவார். இதனாலையே இவரது பெயரில் கோவை அடைமொழியை இணைத்து கோவை சரளா என்று அழைக்கப்பட்டார்.எனினும் இவரது பூர்வீகம் கேரளா என்பது பலருக்கும் தெரியாது.
இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்க கூடிய கோவை சரளா சுந்தரி சௌந்தரி, வந்தானா தந்தானா, சபாஷ் மீரா, காமெடியில் கலக்குவது எப்படி, செல்லமே செல்லம் போன்ற நிகழ்ச்சிகளை சன் கலைஞர், ஜெயா, விஜய் என பல தொலைக்காட்சிகளில் பங்கேற்று செய்திருக்கிறார்.
கோவை சரளாவின் மற்றொரு முகம்..
மனோரமா ஆச்சிக்குப் பிறகு காமெடியில் கலக்கி வரும் கோவை சரளாவின் இடத்தை இதுவரை யாரும் திரை உலகில் நிரப்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கோவை சரளாவிடம் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
திரை உலகில் மிகச் சிறப்பான பெயரும் புகழும் பணமும் இருக்கக்கூடிய சமயத்தில் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியது.
இதற்குக் காரணம் இந்த பேட்டியின் போது அவர் பேசும் போது இவர் குடும்பத்தில் தனக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் இருப்பதாக கூறினார். மேலும் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த இவர்கள் தான் சினிமாவில் நடித்து சம்பாதித்த பிறகு தான் ஒரு நிலையான வருமானத்தையும் நல்ல நிலையையும் எட்ட முடிந்தது என்று கூறினார்.
இந்நிலையில் எனது சகோதரிகள் மற்றும் சகோதரர் திருமணத்தை முடித்து அவர்கள் பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த போது நான் அதை திரும்பி பார்க்கும் சமயத்தில் எனக்கு வயதாகி விட்டது என்று கூறி இருக்கிறார்.
சகோதரியின் குழந்தைகள் என் குழந்தைகள்..
அப்படி இருந்தால் என்ன என் சகோதரிகளின் குழந்தைகள் தான் என் குழந்தைகள் என்று நான் வாழ பழகிக் கொண்டேன் என்று தனது மற்றொரு முகத்தை கோவை சரளா வெளிப்படுத்திய விதத்தைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டினார்கள்.
இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்றால் நம்மை மனம் விட்டு சிரிக்க வைக்க கூடிய கோவை சரளாவின் வாழ்க்கையில் மென்மையான உணர்வு உள்ளதோ அந்த அளவு சோகம் நிறைந்து காணப்படுகிறது. அதைக் கூட அவர் எவ்வளவு அழகாக வெளிப்படுத்தினார் என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.
இதை அடுத்து கோவை சரளாவை போல அனைவரும் பழகிவிட்டால் விருப்பு வெறுப்புகளே இல்லாத நிலை உருவாகும் என்பதில் எந்த அளவும் சந்தேகம் இல்லை. இதைத்தான் கனியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னாரோ..