வடிவேலு கூட நடிச்சா.. இதை பண்ணியே தான் ஆகணும்.. இல்லனா முடிஞ்சிடும்.. நடிகை பிரியங்கா ஓப்பன் டாக்..!

தமிழ் திரை உலகில் காமெடியன்களின் வரிசையில் பல நடிகர்,நடிகைகள் நடித்திருக்கிறார்கள். எனினும் இவரின் பெயரை கேட்டால் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அந்த அளவு தனது பாடி லாங்குவேஜ் மூலம் பலரையும் சிரிக்க வைத்த வைகை புயல் வடிவேலு மதுரையில் இருந்து கிளம்பி சினிமா துறையில் நடிக்க வந்தவர்.

மேலும் வடிவேலு பற்றி பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்களை இணையங்களில் நீங்கள் படித்து தெரிந்து கொண்டு இருக்கலாம். என்ன தான் திரையில் பக்காவாக நடித்திருந்தாலும் ஒரு வயித்து எரிச்சல் பிடித்த ஆசாமியாக தான் விளங்குகிறார்.

வடிவேலு கூட நடிச்சா..

இதற்கு காரணம் தன்னோடு நடிக்கின்ற நடிகைகள் தன்னை விட அதிகளவு நடிப்பில் பெயர் பெற்றுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெண்கள் விஷயத்திலும் அப்படி, இப்படி என்று இருக்கக் கூடிய நடிகராக விளங்குகிறார்.

கேப்டன் விஜயகாந்தின் மூலம் திரையுலக வாழ்க்கையில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட இவர் கேப்டனின் இறுதி பயணத்திற்கான அஞ்சலியை கூட செலுத்தாத மனிதராக விளங்குகிறார்.

மேலும் இவரது காமெடிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு மருந்தாக மாறி மனம் விட்டு சிரிக்கக் கூடிய வகையில் தன்னுடைய அற்புத நடிப்பை வெளியிட்டதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வடிவேலு காமெடியை விரும்பி பார்ப்பார்கள்.

சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த இவர் சில பிரச்சனைகள் இடையில் ஏற்பட்டதை அடுத்து சில வருடங்கள் திரையுலகில் தலை காட்டாமல் இருந்தார்.
இதனை அடுத்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

பண்ணியே தான் ஆகணும் இல்லேன்னா..

இதனைத் தொடர்ந்து இவர் மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்திருந்தாலும் முன்பு நடித்ததை போல இவரது நடிப்பு பலரையும் ஈர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனினும் தற்போது இவர் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார்.

இந்நிலையில் இவரோடு சில படங்களில் நடித்துள்ள பிரபல காமெடி நடிகை பிரியங்கா அண்மை பேட்டி ஒன்றிலா அளித்து அதில் வடிவேலு குறித்து பல்வேறு வகையான தகவல்களை புட்டு, புட்டு வைத்திருக்கிறார்.

அந்த வகையில் அவர் அந்த பேட்டியில் வடிவேலு குறித்து என்னென்ன சொன்னார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகவும், விளக்கமாகவும் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை பிரியங்கா ஓப்பன் டாக்..

நடிகை பிரியங்கா அந்த பேட்டியின் போது நடிகர் வடிவேலுவை பொறுத்த வரை அவரோடு இணைந்து நடிப்பது தனக்கு சுலபமாக இருந்தது என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல் ஒரே ஒரு கடினமான விஷயம் என்னவென்றால் அவர் நடிக்கும் காட்சிகளில் நாம் நடிக்கும் போது சிரிப்பை கட்டுப்படுத்தி தான் நடிக்க வேண்டும்.

இந்த மாதிரியாக சிரிப்பை கட்டுப்படுத்தி நடிப்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதை எடுத்து அவரோடு இணைந்து நடிக்கும் காட்சிகளில் என்னை மறந்து சில காட்சிகளில் சிரித்து விடுவேன்.

இதனாலேயே குறிப்பிட்ட காட்சியை மீண்டும், மீண்டும் படமாக்கக்கூடிய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டு இருக்கிறேன். எனவே அதிக முறை டேக் எடுப்பார்கள்.அத்துடன் என்னால் சிரிப்பை சற்றும் கண்ட்ரோல் செய்ய முடியாத நிலையில் அவர் நடிப்பில் மெய் மறந்து விடுவேன்.

என்ன செய்வது வடிவேலு உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக சிரிப்பை கண்ட்ரோல் பண்ணி நடித்தால் தான் அவருடன் நாம் நடிக்க முடியும். இல்லையென்றால் பல டேக்குகள் ஆகும் என்ற தகவலை சொல்லி இருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version