விரைவில் வெளிவரும் நிலையில்… விஜய சேதுபதி – யின் “இடம் பொருள் ஏவல்”…!

 மக்கள் செல்வன் என்று அனைவராலும் மிக அன்போடு அழைக்கப்படும் விஜயசேதுபதியின் இடம் பொருள் ஏவல் படம் மீண்டும் வெளியாகி வர  தயாராகிறது.

தர்மதுரை படத்துக்கு முன்பு படம்பிடிக்கப்பட்ட இந்த படம் கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு திரையரங்குகளுக்கு வராமல் அப்படியே தடைபட்டு போனது.

 இதையடுத்து தற்போது தூசி தட்ட பட்ட இந்த படம் விரைவில் திரையரங்குகளுக்கு ரசிகர்களின் பார்வைக்காக வர உள்ளதாக என்ற படத்தை தயாரித்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

 இந்த படத்தை இயக்கிய சீனு ராமசாமி இந்த படத்தை அப்படியே விட்டு விட்டு மாமன்னன் மற்றும் தர்மதுரை படத்தை இயக்கி அதை ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். மேலும் அவர் இடம் பொருள் ஏவல் படத்தை மட்டும் ஓடிடியில் வெளியிட விரும்ப வில்லை.

 திருப்பதி பிரதர்ஸின் நிறுவனத்தில் பணப் பிரச்சனை காரணமாக மீண்டும் இந்த படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

 தற்போது விஜயசேதுபதி சாருக்கான் அடிக்கக்கூடிய படத்தை ஆன்டி ஹீரோவாக நடித்து வருகிறார் ஏற்கனவே இவர் உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தில் சீரும் சிறப்புமாக நடித்து மக்களின் பெரும் மதிப்பைப் பெற்றார்.

 அவர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் ஜவான் படம் மிகப்பெரிய திருப்பு முனையில் இவருக்கு அமைத்துக் கொடுக்கும் என்று பல கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த திரைப்படம் மிக விரைவில் வெளிவரும் அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள் எனவே விஜய் சேதுபதி நடித்த படமானது மிக விரைவில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திரையை நோக்கி வருவதற்கான வாய்ப்பு கிடைத்துவிட்டது.

 இதை அறிந்து கொண்ட ரசிகர்கள் தற்போது மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தீபாவளிக்கு கிடைத்த பட்டாசு போல அவர்கள் மனம் மகிழ்ச்சியில் வெடிக்கிறது.

தற்போது இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி தியேட்டர் ரிலீஸ் செய்ய இருக்கிறார். வரும் நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …