உறுதியான ரச்சிதா மகாலட்சுமி இரண்டாம் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

தொலைக்காட்சி தொகுப்பாளினியும், மாடல் அழகியுமாக தனது கெரியரை துவங்கியவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி .

இவர் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்த போதே கன்னட சினிமாவில் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி ;

கன்னட சினிமாவில் பல்வேறு தொடர்களில் நடித்து அங்கு பெரும் புகழ்பெற்ற சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வந்த சமயத்தில் தான் இவரது நடிப்பு தமிழ் சினிமா பார்க்கும் ஒரு சாயலை காட்டியது.

உடனே தமிழ் சீரியல் இயக்குனர்கள் ரக்ஷிதாவை ஸ்கெட்ச் போட்டு கன்னத்திரைத்துறையில் தூக்கிவந்தனர்.
கன்னட சினிமாவிலிருந்து இங்கு வந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

முதன் முதலில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” தொடரில் நடித்து அறிமுகமானார் நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி .

பிரபலமான நடிகையாக ரக்ஷிதா:

இந்த சீரியலில் அவருடன் ஜோடியாக நடித்தவர் தான் தினேஷ். தினேஷை காதலித்து லக்ஷிதா மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு “சரவணன் மீனாட்சி” தொடரில் “தங்கம் மீனாட்சி” என்ற கேரக்டரில் நடித்த ஒட்டுமொத்த இல்லத்தரிசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

அந்த சீரியல் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிகர் ரியோ ராஜ் நடித்திருந்தார்.

தொடர்ந்து சீரியலில் வாய்ப்புகள் கிடைக்க நடித்து வந்த நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கருவாடு” என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பிக்பாஸ் வாய்ப்பு:

ஆனால், அந்த திரைப்படம் அவருக்கு பெரியதாக பெயர் சொல்லும் படியாக அமையவில்லை. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான போட்டியாளராக பார்க்கப்பட்டார்.

முன்னதாக ரக்ஷிதா மகாலட்சுமி தனது கணவர் தினேஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

கணவரை பிரிந்த ரக்ஷிதா மகாலட்சுமி தொடர்ந்து சீரியல்களில் நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார். ஆனால், இவரது ரசிகர்கள் மீண்டும் தினேஷ் உடன் சேர்ந்து வாழ வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர் .

கணவருடன் விவாகரத்து:

இப்படியான நேரத்தில் தினேஷ் போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் தினேஷ் மிகவும் நல்ல மனிதராக மக்களுக்கு தென்பட்டார்.

ரக்ஷிதா தான் தன்னுடைய வீண் கோபத்தாலும் முன்கோபத்தாலும் தினேஷை பிரிந்து இருப்பார் என குற்றம் சுமத்தப்பட்டார் .

அதனால் ரக்ஷிதா மனம் திருந்தி மீண்டும் தினேஷ் போன்ற நல்ல மனிதருடன் வாழ வேண்டும் என அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர் .

ஆனால், ரட்சிதாவோ தன்னுடைய விடாப்பிடியான குணத்தால் மனம் மாறாமல் தொடர்ந்து அடாவடியாக இருந்து வந்தார்.

அது மட்டும் இல்லாமல் தினேஷ் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும். ஆபாசமாக மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்வதாகும் போலீசில் புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பின்னர் ரக்ஷிதா வெறும் பொய் புகார்களை கூறி இருப்பது அம்பலமாகியது. தினேஷும் அதை பல பேட்டிகளில் உறுதிப்படுத்தி இருந்தார்.

இப்படியாக ரக்ஷிதா தொடர்ந்து அவப்பெயரை சம்பாதித்து வந்தார். சமீபத்தில் கூட தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு புதியதாக வீடு ஒன்றை வாங்கி அதில் குடி ஏறி இருந்தார்.

இரண்டாம் திருமணம்:

அந்த மகிழ்ச்சியான செய்தியை கூட ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இப்படியான நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் ரக்ஷிதா மகாலட்சுமி வேறொரு நபரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறாராம்.

இந்த தகவல் தினேஷிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அவரது ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக இருக்கிறது. ஆம். யார் அந்த நபர் என்று ஆராய்ந்து பார்த்ததில், கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இவர் ரச்சிதாவின் நீண்ட கால குடும்ப நண்பர் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்து ரச்சிதா மகாலட்சுமி தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version