இந்த சேனலுடன் மோதலா..? ரகசியத்தை போட்டு உடைத்த மைனா நந்தினி..!

சீரியல் நடிகையும் சின்னத்திரை நடிகை மைனா நந்தினி சரவணன் மீனாட்சி சீசன் 2வில் மைனா ரேவதி என்னும் கேரக்டரில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளமாக பார்க்கப்பட்டது. அதை எடுத்து சின்ன தம்பி சின்னதம்பி தொடரிலும் அவர் நடித்திருந்தார்.

மைனா நந்தினி:

பல்வேறு சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது .

இதனிடையே பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமாக இருந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

ஆனால் ஒரு வருடத்திலேயே அவரது கணவர் கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதை எடுத்து மீண்டும் நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மைனாவுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை இருக்கிறார்.

தொடர்ந்து திரைப்படம் சீரியல் என நடித்து வரும் இவர் கடந்த ஒரு வருடமாகவே விஜய் டிவியில் தலை காட்டாதது ஏன் ? என்பது குறித்து கேள்வி எழுப்பதற்கு… ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார்.

இந்த சேனலுடன் மோதலா..?

அதைப்பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். விஜய் டிவியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் நடித்து கிட்டத்தட்ட விஜய் டிவி மெட்டீரியல் ஆகவே மாறி வந்த மைனா நந்தினி சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

அந்த தொடரில் கிடைத்த பெயரையே தன்னுடைய அடையாள பெயராகவும் அவருக்கு மைனா நந்தினி என அடையாளமாக பார்க்கப்பட்டு வந்தார்.

அந்த சீரியலை தொடர்ந்து கல்யாண முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி சீசன் 3 , சின்னதம்பி அரண்மனைக்கிளி , பாண்டியன் ஸ்டோர்ஸ், வேலைக்காரன் இப்படி தொடர்ந்து விஜய் டிவியில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமாகி வந்தார்.

உடைந்த ரகசியம்

அப்படி இருக்கும் சமயத்தில் திடீரென விஜய் டிவி பக்கமே மைனாவை பார்ப்பதில்லை இதனால் விஜய் டிவி தரப்புக்கும் மைனாவுக்கும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனால் தான் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு நிகழ்ச்சியும் கலந்து கொள்ளவில்லை எனும் பரபரப்பாக பேசப்பட்டது .

இது குறித்து அண்மைய பேட்டி ஒன்றில் அவரிடமே கேட்டதற்கு…. எனக்கும் விஜய் டிவி தரப்புக்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை.

எனக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் சீரியஸ்களில் நடிக்கும் வாய்ப்பும் என்னை தேடி வந்தது .

இதனால் விஜய் டிவியில் இருந்து தன்னை நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் என்னால் போக முடியாத சூழலில் நான் இருந்தேன்.

அதை தவிர்த்தும் எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இப்படி வெளிவரும் செய்திகளில் உண்மையே இல்லை என அவர் ஆணித்தரமாக அடித்து கூறினார்.

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார். மேலும் தற்போது யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் சட்னி சாம்பார் என்ற வெப் தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version