என் வயதை பொருட்படுத்தாமல்.. படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்..!

2006-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகிய லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் திரைப்படத்துறையில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும், நிகழ்ச்சி மேலாளராகவும் திகழ்ந்தவர்.

அந்த வகையில் இவர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பு 1992 – ஆம் ஆண்டு முதல் 2001 – ஆம் ஆண்டு வரை ஓமனில் மஸ்கட் நகரில் நிகழ்வு மேலாண்மை வணிகத்தை நடத்தி இருக்கிறார்.

இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்..

தமிழ் திரையுலகில் நல்ல நடிகையாகவும், பெண் இயக்குனராகவும் இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவர் 2006-ஆம் ஆண்டு சக்கர முத்து என்ற மலையாள திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானதை அடுத்து 2008-ஆம் ஆண்டில் கரு பழனியப்பனின் திரைப்படமான பிரிவோம் சந்திப்போம் படத்தில் சினேகாவுக்கு தாயாராக நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் தான் தமிழுக்கு இவருக்கு முதல் திரைப்படம். இதனைத் தொடர்ந்து 2008-ஆம் ஆண்டில் பொய் சொல்லப் போகிறோம், எல்லாம் அவன் செயல் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கக்கூடிய இவர் 2009-ஆம் ஆண்டில் திரு திரு திரு என்ற படத்தில் நடித்ததோடு ஈரம், நாடோடிகள், சிரித்தால் ரசிப்பேன், வேட்டைக்காரன், ஆதவன் போன்ற பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் 2010-ஆம் ஆண்டு வெளிவ ந்த விண்ணைத்தாண்டி வருவாயா, ஆண்மை தவறேல், ராவணன், நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ் மொழி படங்களில் நடித்த இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவரது சிறப்பான நடிப்பை 2011-ஆம் ஆண்டில் மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் ஒரு மகளின் இறப்புக்காக பழி வாங்கும் தாயின் கதாபாத்திரத்தை செய்து தமிழக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

இப்படி பல்வேறு தமிழ் படங்களில் தனது நடிப்பின் மூலம் அசத்திய லட்சுமி ராமகிருஷ்ணன் 2012-ஆம் ஆண்டு ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் இயக்குனராக தன் சிறப்பான பணியை செய்ததை அடுத்து சிறந்த பெண் இயக்குனர் விருதை வென்றார்.

என் வயதை பொருட்படுத்தாமல்..

திரைப்படங்களோடு இவரது பயணம் நின்று விடவில்லை. பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி பல கோடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை பிடித்துக் கொண்டார்.

சொல்வதெல்லாம் உண்மை தொடரில் பலரது உண்மை சம்பவங்களை விளக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் அண்மை பேட்டி ஒன்றில் தனக்கு திரைத்துறையில் ஏற்பட்ட அட்ஜஸ்ட்மெண்டை பற்றி ஓப்பன் ஆகக் கூறி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த பேட்டியானது ஒரு பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கொடுக்கப்பட்டுள்ளது .மேலும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி யார் அந்த இயக்குனர் என்ற கேள்வியை கிளப்பி விட்டுள்ளது.

இதற்குக் காரணம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தன்னை பிரபல மலையாள இயக்குனர் அட்ரஸ்மென்ட்க்கு கட்டாயப்படுத்தி அழைத்ததாகவும், இவர் அதனை மறுத்ததால் பல தொல்லைகளை சந்திக்க நேரிட்டதாகவும் சொன்ன விஷயம் தற்போது வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இந்த நிலைமையா? என்று கேட்கவும் வைத்து விட்டது

படுக்கைக்கு அழைத்தார் லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்..

இதனைத் தொடர்ந்து படுக்கைக்கு அழைத்த அந்த இயக்குனர் யார் அவர் பெயரை சொல்லாமல் விட்டு விட்டாரே என்று ரசிகர்கள் தற்போது அந்த நபரின் பெயரை அறிந்து கொள்ள ஆவலோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் அவரின் பெயரை ஏன் லட்சுமி ராமகிருஷ்ணன் மறைத்தார் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் யார் அந்த மலையாள நடிகர் என்பது பற்றி கண்டுபிடிக்க அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version