Site icon Tamizhakam

என்னோட இந்த பாகம் டைட்டாக இருக்க இது தான் காரணம்.. வெளிப்படையாக பேசிய CWC கனி..!

மாடலிங் துறையில் அறிமுகம் ஆகி அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கனி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நபர்களில் இவரும் ஒருவர்.

இவரது இயற்பெயர் கார்த்திகா என்று கூறப்படுகிறது. மாடலிங் துறையில் இருந்து வந்த இவர் தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு திரை துறையிலும் பணிபுரிந்து இருக்கிறார். மேலும் சமீபகாலமாக யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து அதில் சமையல் தொடர்பான விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார்.

அதற்கு முன்பு கனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒன்றை பெரிதாக எதிலும் கலந்து கொண்டது கிடையாது. ஆனால் அவர் முதலில் கலந்து கொண்ட நிகழ்ச்சியே குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த காரணத்தினால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சின்னத்திரையில் வரவேற்பு:

பொதுவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரையில் பிரபலமாக இருக்கும் வெவ்வேறு நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களைதான் சமைப்பதற்கு அழைப்பார்கள். குக் வித் கோமாளி சீசன் 2 வந்த காலகட்டத்தில் அப்பொழுதுதான் அது வளர்ந்து வந்த நிகழ்ச்சியாக இருந்தது.

அதனால் அதிகமாக புதிய முகங்களைதான் அப்பொழுது அறிமுகப்படுத்தினார்கள். அந்த வகையில்தான் கனியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பை பெற்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்று கொடுத்தது அதனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் முக்கியமான ஒருவராக கனி மாறினார்.

மேலும் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட அவருக்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தது. நிறைய யூடியூப் சேனல்கள் அவரை பேட்டி எடுக்க துவங்கின. இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்கேற்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

உடற்பயிற்சி குறித்து கனி:

சமீபத்தில் அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் கனி தொடர்ந்து அது தொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். எப்பொழுதும் பார்ப்பதற்கு இளமையாக இருக்கிறார் கனி என்று இது குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்ட பொழுது அதற்கு உடற்பயிற்சிதான் காரணம் என்று கூறியிருக்கிறார் கனி.

உடலுக்கு தொடர்ந்து பயிற்சி கொடுத்து வரும்பொழுது நம்மடைய தோல் எல்லாம் மிகவும் டைட்டாக மாறும். அதனால் பார்ப்பதற்கு இளமையாக தெரிவோம். நிறைய பேர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அங்கு சென்று எடை தொடர்பான உடற்பயிற்சிகளை அதிகம் செய்யுங்கள் அப்படி செய்யும்பொழுதுதான் உங்களது தோல் அதிக கடினமாகும் என்று அறிவுரை கொடுத்து இருக்கிறார் கனி.

Exit mobile version