வருமானமா..? தன்மானமா..? குக் வித் கோமாளியில் நடந்த உண்மை இது தான்..! இப்போ ரசிகர்கள் யார் பக்கம் தெரியுமா..?

வருமானத்தை விட எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்று வீர தமிழச்சியாய் தனக்கு நேர்ந்த இந்த நிலைமைக்கு காரணம் இவர்தான் என்று தோல் உரித்து காட்டி இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலை, பிரியங்கா இடையே நடந்த விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

இதனை அடுத்து தற்போது இணையம் முழுவதுமே மணிமேகலை ராக், விஜய் டிவி ஷாக் என்ற ரீதியில் பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்து இணையும் முழுவதும் இவர்களது விஷயம் வைரலாக வெளிவர ஆரம்பித்துவிட்டது.

வருமானமா..? தன்மானமா..? குக் வித் கோமாளியில்..

அப்படி குக் வித் கோமாளியில் என்ன நடந்தது. இந்த இரண்டு கலைஞர்கள் இடையே அப்படி என்ன மோதல் ஏற்பட்டது. அதன் உண்மை நிலை என்ன என்பது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

இந்நிலையில் குக் வித் கோமாளியில் இருந்த மணிமேகலை சில நாட்களுக்கு முன்பு சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் அவர் சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால் தன் வாழ்க்கையில் வேலை என்று கொடுக்கப்பட்டால் அதை 100% ஈடுபாடுடன் செய்வேன் என்று சொல்லி இருக்கிறார்.

2019 ஆம் ஆண்டில் இருந்தே குக் வித் கோமாளியில் தன்னை இணைத்துக் கொண்ட நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக இதில் தொடர்ந்து பயணித்து வந்துள்ளேன். இந்த போட்டியில் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்து இன்று ஒரு ஆங்கர் ஆக வெளிவந்திருப்பது பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் அவர் அண்மையில் போட்டிருக்கக் கூடிய விஷயத்தில் தன்மானத்தை பற்றி பேசியிருக்கிறார். அது தவிர வேறு எதுவும் தனக்கு பெரிதில்லை என்று ஆணித்தரமாக கூறிய விஷயம் தான் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த குக் வித் கோமாளி சீசனில் தன்னுடைய தன்மானத்தை தொட்டு அசிங்கப்படுத்த கூடிய வகையில் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதாக சொல்லி இருக்கிறார்.

இதற்குக் காரணம் இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கிய மற்றொரு தொகுப்பாளினி பிரியங்கா தன்னை தன் வேலையை செய்யவிடாமல் அதிகளவு டாமினேஷன் செய்ததாக அதிர்ச்சி தரும் தகவலை மணிமேகலை ஓபன் ஆக போல்டாக பதிவு செய்திருக்கிறார்.

நடந்த உண்மை இது தான்..

மேலும் இப்படி தொடர்ந்து தன் தன்மானத்தை சீண்டி வரும் பிரியங்கா பற்றி கூறியதோடு அவரிடம் அடிபணிந்து சென்றால் தான் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டதை எடுத்து தனக்கு வருமானத்தை விட தன்மானம் தான் பெரிது என்ற முடிவில் குக் வித் கோமாளிகையில் இருந்து விலகி இருக்கிறார்.

மேலும் பிரியங்காவிற்கு சோப்பு போட்டு அடங்கி போவதின் மூலம் வாய்ப்புகள் எதிர்காலத்தில் நிறைய கிடைக்கும் என்றால் அது போன்ற வாய்ப்புகள் எனக்குத் தேவையே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் தற்போது இவர்களுக்கு இடையே நிகழ்ந்து வரும் இந்த சண்டையில் ரசிகர்களின் நிலை என்ன இவர்கள் இருவரும் எப்படிப்பட்டவர்கள் என்பதை பார்க்கும் போது கல்லூரி காலத்தில் இருந்தே பல்வேறு நிகழ்ச்சிகளை இருவரும் தொகுத்து வழங்கி வந்திருக்கிறார்கள். பல்வேறு இடர்களையும் சந்தித்து இருக்கிறார்கள்.

இப்போ ரசிகர்கள் யார் பக்கம் தெரியுமா..?

மேலும் ஒரு உரையில் இரண்டு கத்திகள் இருப்பது கடினம் என்பதை இந்த சீசன் நிரூபித்துள்ளது. அதாவது இந்த சீசனில் ஒரு விஜே போட்டியாளராகவும் மற்றொரு விஜே தொகுப்பாளினியாக இருப்பது கடினம்.

கோமாளியாக இருப்பவர் கோமாளியாக மட்டும் தான் நடக்க வேண்டும். அதை விடுத்து ஆங்கர் ஆக நுழைவதற்கு செயல்படுவதற்கு காரணம் என்ன உள்ளது? இந்த நிகழ்வில் நான் ஆங்கரா இல்லை அவரா? அவர் சத்தம் போட்டது போல் நான் நிகழ்ச்சி நடக்கக்கூடிய சமயத்தில் சத்தம் போட்டு இருந்தால் என்ன ஆகி இருக்கும்.

இப்படி இரு தரப்பு பற்றியும் பல்வேறு விஷயங்கள் கசிந்து வரக்கூடிய நிலையில் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள். அவர்களது மனதில் என்ன சிந்தனை ஓடுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவியுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version