நைட்டெல்லாம் அழுதேன்… கேவலமா இருந்துச்சி.. கண்ணீர் விட்டு அழுத மணிமேகலை.. அடக்கொடுமையே.!

கடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளங்களில் மணிமேகலை என்கிற பெயர்தான் அதிக வைரல் ஆகி வந்துகொண்டு இருக்கிறது. மணிமேகலையை பொருத்தவரை விஜய் டிவியில் உள்ள முக்கியமான பிரபலங்களில் இவரும் ஒருவர் என்று கூறலாம்.

அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தனக்கென தனிப்பட்ட இடத்தை பிடித்தவர் மணிமேகலை. அப்படி இருந்தும் கூட தற்சமயம் மணிமேகலை பங்காற்றி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

நைட்டெல்லாம் அழுதேன்

ஏனெனில் மணிமேகலை மிகவும் சுறுசுறுப்பான ஒரு நபர் ஆவார். கடந்த சீசன்களில் குக் வித்து கோமாளியில் கோமாளியாக இவர் பங்கேற்று இருந்தார். அப்பொழுது இவர் செய்த நிறைய நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்கள் என்று கூறலாம்.

காலில் அடிபட்டு நடக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது கூட அதோடு வந்து குக் வித் கோமாளியில் பங்கேற்று நடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் மணிமேகலை. அப்படிப்பட்ட மணிமேகலை தற்சமயம் வி.ஜே பிரியங்காவால் வெளியேறி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கேவலமா இருந்துச்சி

இதை அவரே ஒரு காணொளி மூலம் உறுதி செய்தும் இருக்கிறார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை கூறும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகி சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் மணிமேகலை பேசும் பொழுது அது கடந்த சீசனில் நடந்த நிகழ்வு என்று தெரிகிறது. ஏதோ ஒரு விஷயத்திற்காக அவருக்கு குக் வித் கோமாளியில் முன்பு விருதுகள் வழங்கி இருக்கின்றனர். அந்த விருதை பெற்ற மணிமேகலை கூறும்பொழுது இப்பொழுது மிக சந்தோசமாக இருக்கிறது.

நான் எப்பொழுதும் நிகழ்ச்சியில் பலவாறு சமைப்பவர்களை பேசியிருக்கிறேன். ஆனால் நிகழ்ச்சி முடியும் போது எல்லோருக்குமே நல்லது நடக்க வேண்டும் என்றுதான் நான் நினைப்பேன். நகைச்சுவைக்காக மட்டும்தான் இந்த மாதிரி எல்லாம் பேசுவேன்.

அழுத மணிமேகலை

அதேபோல ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது எனக்கு நகைச்சுவை எல்லாம் செய்ய தெரியவில்லை. ஏனெனில் என்னுடன் இருந்த புகழும் பாலாவும் ஏற்கனவே அதில் பழக்கப்பட்டவர்கள் என்றதால் அவர்கள் சூப்பராக எல்லாவற்றையும் செய்தனர்.

ஆனால் எனக்கு மக்களை சிரிக்க வைக்க எதுவுமே செய்ய தெரியவில்லை இதனால் சமூக வலைதளங்களில் எல்லாம் எதற்காக இந்த பெண்ணை வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் திட்டிக் கொண்டே இருந்தனர். இதனால் நான் இரவுகளில் வீட்டிற்கு சென்று தூங்காமல் அழுது கொண்டு இருந்திருக்கிறேன்.

மேலும் அந்த விஷயங்களை கேட்கும் பொழுது எனக்கு என்னை நினைத்து கேவலமாக இருக்கும். இருந்தாலும் நானும் இவர்களைப் போலவே நன்றாக பெர்ஃபாமன்ஸ் செய்து மக்கள் மத்தியில் இடம் பெற வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த நம்பிக்கையின் காரணமாக இப்பொழுது இந்த விருதை பெற்றிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் மணிமேகலை. அந்த விருதை வெங்கடேஷ் பட் ஒருவேளை தற்சமயம் குக் வித் கோமாளியில் இருந்து இருந்தால் அவர் இந்த மாதிரியான விஷயங்களே நடக்க விட்டிருக்க மாட்டார் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version