ஆறாவது படிக்கும் போதே அது நடந்துச்சு.. வீட்ல சொல்லி செம்ம அடி.. பவித்ரா லட்சுமி ஓப்பன் டாக்..!

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பிரபலமானவர்களில் நடிகை பவித்ரா முக்கியமானவர். வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்து விட வேண்டும் என்பது நடிகை பவித்ராவின் கனவாக இருந்தது.

சாதாரண குடும்பத்தில் பிறந்து பெரிய போராட்டத்திற்கு பிறகுதான் அவர் மக்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்றார் என்று கூறவேண்டும். வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

தமிழில் எண்ட்ரி:

ஆனால் எடுத்த உடனே அவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. முதன்முதலாக மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து 2021 இல் ஒரு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கு நடுவே அவர் 2021 ஆம் ஆண்டு பங்கு பெற்ற நிகழ்ச்சிதான் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொருத்தவரை அது பெரிய ஆடியன்ஸை கொண்ட ஒரு நிகழ்ச்சியாகும்.

அதனால் அதில் பங்குபெறும் எல்லோருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் அந்த வகையில் பவித்ராவிற்கும் அதிக வரவேற்பு கிடைக்க தொடங்கியது அதனை தொடர்ந்து அவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

குக் வித் கோமாளியில் வரவேற்பு:

தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அவரது கனவு நினைவானது. நாய் சேகர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் பவித்ரா. இந்த நிலையில் பவித்ரா அவருடைய காதல் அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் சமீபத்தில் பேசியிருந்தார்.

அந்த பேட்டியில் அவரிடம் கேட்கும் பொழுது உங்களுக்கு வந்த லவ் ப்ரொபோஸ்களிலேயே வித்தியாசமான ஒரு ப்ரோபோசல் என்றால் எதை கூறுவீர்கள் என்று கேட்டனர். அப்பொழுது அவர் கூறும் பொழுது என்னுடைய லவ் ப்ரொபோஸ்களில் மறக்க முடியாதது என்று கேட்டால் கண்டிப்பாக சமீபத்தில் எனக்கு ஒரு லவ் ப்ரொபோஸ் வந்தது அதை தான் கூற வேண்டும்.

ஆனால் வித்தியாசமானது என்று கேட்டால் அது என்னுடைய சிறு வயதில்தான் நடந்தது நான் சிறு வயது முதலே பெண்கள் பள்ளியில்தான் படித்து வந்தேன். அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு பையன் என்னுடைய தோழியிடம் ஒரு ரப்பரை கொடுத்துவிட்டு அதை பவித்ராவிடம் கொடுத்து விடும் படி கூறினான்.

நான் அதை எடுத்து பார்த்தபொழுது அதில் ஐ லவ் யூ பவித்ரா என்று எழுதியிருந்தது. பிறகு அதற்கு பிறகு அந்த பையனை நான் பார்க்கவே இல்லை மேலும் இந்த விஷயத்தை நான் எங்கள் வீட்டில் சென்று கூறினேன் அவர்கள் என்னை மிகவும் திட்டினார்கள். பொதுவாகவே எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை அப்பொழுது நான் வீட்டில் கூறி விடுவேன் என்று கூறியிருக்கிறார் பவித்ரா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version