எப்போதும் அதை பண்ணீட்டே இருந்தாங்க… இப்படி நடக்கும்னு நினைக்கல.. பிரியங்கா குறித்த ரகசியத்தை கூறிய ராமர்.!

குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறேன் என்று மணிமேகலை கூறியது முதலே தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் விஷயமாக இது மாறி இருக்கிறது. குக் வித் கோமாளி கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சி ஆகும்.

பெரும்பான்மையான மக்களை ஈர்த்த குக் வித் கோமாளி ஒரு வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி துவங்கிய காலகட்டத்தில் இருந்து இதில் கோமாளியாக இருந்து வந்தவர் மணிமேகலை. அதற்குப் பிறகு இந்த வருடம் வெளியான குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் மட்டும் மணிமேகலை தொகுப்பாளராக களம் இறங்கினார்.

அதை பண்ணீட்டே இருந்தாங்க

ஏனெனில் வெகு நாட்களாகவே இவருக்கு குக் வித் கோமாளியை தொகுத்து வழங்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. அந்த ஆசை நிறைவேறாததனாலேயே நான்காவது சீசனில் பாதியிலேயே குக் வித் கோமாளி விட்டு வெளியேறி விட்டார் மணிமேகலை.

இதனை பார்த்த நிறுவனத்தார் இவருக்கு தொகுப்பாளர் வேலையை கொடுத்தனர். ஆனால் அதையும் அவரால் சிறப்பாக செய்ய முடியவில்லை அதே குக் வித் கோமாளியில் குக்காக வந்த வி.ஜே பிரியங்கா தொடர்ந்து மணிமேகலையை இம்சை செய்ததாக கூறப்படுகிறது.

இப்படி நடக்கும்னு நினைக்கல

இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை அதை ஒரு வீடியோவாகவும் பதிவேற்றி இருந்தார். இது மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் விஷயமாக மாறியது. மேலும் விஜே பிரியங்கா யாரையுமே வளர விடுவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

தொடர்ந்து நான் தொகுப்பாளர் வேலையை பார்க்க விடாமல் என்னை தொந்தரவு செய்து கொண்டே இருந்தார். இது குறித்து நான் விஜய் டிவியிடமும் பேசினேன். ஆனால் அவரை அனுசரித்து போனால் தான் என்னால் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும் என்று அவர்கள் கூறினார்கள்.

ரகசியத்தை கூறிய ராமர்

அப்படி ஒன்றும் எனக்கு எந்த வாய்ப்பும் தேவையில்லை எனவேதான் நான் அதிலிருந்து விலகி விட்டேன் என்று கூறியிருக்கிறார். இது பலருக்குமே அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இந்த நிலையில் மணிமேகலைக்கு ஆதரவான விமர்சனங்கள் அதிகமாக வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் இது குறித்து பேசிய ராமர் கூறும் பொழுது எப்போதும் குக் வித் கோமாளியில் மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் இடையே சண்டை இருந்து வந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் ஏதோ காமெடிக்காக சண்டையிடுகிறார்கள் என்று தான் நான் நினைத்து வந்தேன்.

ஏனெனில் பெரும்பாலும் இப்படி நாங்கள் சண்டை போட்டுக் கொள்வது உண்டு. பிறகு மணிமேகலை விலகும் போதுதான் அவர் சீரியஸாகவே சண்டை போட்டு இருக்கிறார் என்று தெரிந்தது. நான் அவரிடம் சென்று பேசினேன் இருந்தாலும் இனிமேல் என்னால் முடியாது அண்ணா என்று கூறிவிட்டார். மணிமேகலை. அதே போல பிரியங்காவும் இது பற்றி பேச விருப்பமில்லை என்று கூறிவிட்டார் என்று இந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் ராமர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version