பிரியங்காவும் CWC 5 நிகழ்ச்சியை விட்டு போக போறாங்களா..? திடீரென அவரே சொன்ன வார்த்தை..!

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவு பெற்ற நிகழ்ச்சியாக திகழ்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இது வரை நான்கு சீசன்களை கடந்து விட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 ஆக ஒளிபரப்பாகி வருகிறது.

CWC 5 பிரியங்கா..

குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரத்திற்குள் போட்டியாளராக பங்கேற்ற நாஞ்சில் விஜயன் திடீர் என்று விலகப்போவதாக அறிவித்தார்.

இதனை அடுத்து விஜய் டிவியில் விஜே-வாக பணி புரியும் பிரியங்காவும் இந்த நிகழ்ச்சியில் வெளியேற போகிறார் என்ற செய்தி வந்துள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கக் கூடிய இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 5 எட்டியுள்ள நிலையில் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே பல சர்ச்சைகள் பிடித்துள்ளது.

இதில் இது வரை நடுவராக பணியாற்றி வந்த வெங்கடேஸ் பட் விலக்கப் போகிறேன் என்று சொல்லி இருந்தார். அதனை அடுத்து இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரும் விளக்கினர்.

இந்த நிலையில் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.

குக் வித் கோமாளியில் இருந்து விலக போறாங்களா?

இந்நிகழ்ச்சி தொடங்கியதை அடுத்து முதல் வாரம் வரை கோமாளியாக இருந்த நாஞ்சில் விஜயன் இனி நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று கூறினார்.

அது போல இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் பாக்ஸ் ஆப் கம்பெனி தயாரிக்கும் எந்த நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ள மாட்டேன் என கூறிவிட்டார்.

இந்நிலையில் தற்போதைய எபிசோட் வீடியோக்கள் வெளி வந்துள்ளது. அதில் பிரியங்கா நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே போக வேண்டும் என்றால் என்ன ப்ரோசிஜர் என்று கேட்டிருக்கிறார்.

அப்படி என்ன அவங்க சொன்னாங்க..

அப்படி அவர் வெளியே போவதற்கு என்ன காரணம் என்றால் இந்த வாரம் கடல் உணவுகளை வைத்து சாப்பாடு செய்யும் டாஸ்க்கை கொடுத்திருக்கிறார்கள்.

முதல் முதலில் இந்த சீசனில் அட்வான்ஸ் டாஸ் தொடங்கப்படவுள்ளது. இதில் பிரியங்காவுக்கு கோமாளியாக நடிகை ஷப்னம் வந்திருக்கிறார். இவரை பார்த்ததுமே நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறுவதாக பிரியங்கா தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து விஜய் டிவியின் youtube பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அட்மின் இந்த வீடியோவிற்கு எனது பிரியங்காவும் நிகழ்ச்சியை விட்டு வெளியே போகலாம் என்ற கேப்டன் கொடுத்திருக்கிறார். இது இணையத்தில் அதிக அளவு பேசும் பொருளாக மாறிவிட்டது.

சன் டிவி ஆனது தற்போது டாப்புகுக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை ஒரு சில வாரங்களில் ஒளிபரப்ப உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியானது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக கருதப்படுகிறது.

இதில் குக் வித் கோமாளியில் பணியாற்றிய வெங்கடேஷ் பட் நடுவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் காற்று தீயாய் பரவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜே பிரியங்கா வெளியே இருக்கிறாரா? என்ற கேள்விக்கு தொடர்ந்து எழுப்பி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version