“பெண்களுக்கான எளிய சமையல் குறிப்புகள்..!” – நீங்களும் யூஸ் பண்ணுங்க..!

எளிய சமையல் குறிப்புகள்:வீட்டில் நீங்கள் வைத்திருக்கக் கூடிய பொருட்களில் பூச்சிகளின் தாக்குதல்கள் ஏற்படாமல் இருக்கவும், உங்கள் வேலைகளை எளிதாக செய்து முடிக்க எளிய சமையல் குறிப்புகளை நீங்கள் இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கும் ரவை மற்றும் மைதா டப்பாவில் பூச்சிகள் வராமல் இருக்க கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் போதும்.

Kitchen Tips

வெயில் காலங்களில் தயிர் மிக விரைவில் புளித்து போகும்.இது புளிக்காமல் இருக்க நீங்கள் உறை விட்ட உடனேயே அதில் சிறிதளவு இஞ்சி தோலை நறுக்கி போட்டு விடுங்கள் எளிதில் புளிப்பு ஏற்படாது.

தேங்காயை உடைத்தவுடன் கழுவி உடனே பிரிட்ஜில் நீங்கள் வைப்பது மூலம் அதனுள் ஏற்படும் பிசுபிசுப்பு தன்மை ஏற்படாது.

Kitchen Tips

தக்காளி சட்னி அரைக்கும் போது சிறிதளவு புதினாவை போட்டு அரைப்பதின் மூலம் சட்னி வித்தியாசமாகவும் நறுமணத்தோடும் இருக்கும்.

வெண்டைக்காய் மற்றும் பீட்ரூட்டை நறுக்குவதற்கு முன்பாகவே கழுவி விட்டு தான் நறுக்க வேண்டும். இல்லை என்றால் பிசுபிசுப்பு மற்றும் அதன் நிறம் நீங்கள் மீண்டும் கழுவும் போது போய்விடும்.

நீண்ட நாட்கள் நீங்கள் உங்கள் உளுந்து பருப்பு மற்றும் துவரை பருப்பை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதில் நீங்கள் வேப்பிலை மற்றும் வர மிளகாய் போட்டு வைக்கலாம்.

தோசை மொறு மொறு என்று வரவேண்டுமென்றால் நீங்கள் அரைக்கும் மாபெரும் ஒரு கைப்பிடி ஜவ்வரிசி அல்லது அவலை சேர்த்து அரைத்து ஊத்தி பாருங்கள் மொரு மொரு என்று உங்கள் தோசை வரும்.

Kitchen Tips

நீங்கள் வைக்கும் குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் பெரிய வெங்காயம் ஒன்று தக்காளி ஒன்று இவற்றை லேசாக வணக்கி குழம்பில் கொட்டி விடுங்கள் உப்பு சரியாகிவிடும்.

இட்லிக்கு மிளகாய் பொடி அரைக்கும் போது நீங்கள் வர மிளகாய் வறுத்தால் நெடி ஏற்படும். அப்படி நெடி ஏற்படாமல் இருக்க சிறிதளவு உப்பையும் போட்டு வறுக்கலாம்.

மேற்கூறிய எளிய வீட்டு குறிப்புகளை பயன்படுத்தி நீங்கள் உங்கள் சமையலை எளிதாகவும் சுலபமாகவும் செய்து முடித்து விடலாம்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …