பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்ட கூல் சுரேஷ் மீண்டும் தியேட்டர் வாசலில் நின்று பேசுவாரா? என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தீனி போடக்கூடிய வகையில் எந்த பெரிய படங்களும் தற்போது வெளி வரவில்லை.
ஆனால் பிக் பாஸ் சீசன் 7 மூலம் பிரபலமாகி விட்ட கூல் சுரேஷ் இனி அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருவதால், இனி தியேட்டர் பக்கம் செல்வாரா? என்பது கேள்விக் குறியாகிவிட்டது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் யூடியூப் ஒன்று நடத்திய பிரமாண்டமான விழாவில் கூல் சுரேஷ் கலந்து கொண்டிருக்கிறார். அத்தோடு இவரிடம் பல வகையான புகைப்படங்களை காட்டி அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர்களைப் பற்றி பேச வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் முதலில் திரிஷா புகைப்படத்தை காட்டினார்கள். திரிஷா புகைப்படத்தை பார்த்ததுமே வெட்கப்பட்டு கண்களை மூடிக்கொண்ட கூல் சுரேஷ் திரிஷாவை வர்ணித்து பேச ஆரம்பித்தார். இந்த அழகி என் தலைவரோடு இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்கள். அலை மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படங்களில் திரிஷா நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்து விட்டார் என கூறினார்.
இதனை அடுத்து அடுத்த போட்டோவை காட்டினார்கள். அந்த போட்டோவில் தனுஷ் இருந்தார். தனுஷை பார்த்ததுமே சிரித்து பேசிய கூல் சுரேஷ் எல்லோரும் தனுஷுக்கும், சிம்புவுக்கும் இடையே சண்டை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனா எனக்கு மட்டும் தான் தெரியும். அவர்கள் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்பதை சிரித்த வண்ணமே தெரிவித்தார். மேலும் தனுஷ் மற்றும் சிம்புவை போல தான் அவர்களது ரசிகர்களும் சிம்பு படம் பார்க்க தியேட்டருக்கு போன போது நாங்க தனுஷ் ரசிகர்கள் எங்களுக்கு கூல் சுரேஷ் மிகவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.
அத்தோடு கூல் சுரேஷுக்கு பட வாய்ப்புக்களை தாங்க என்று கேட்டிருப்பதாக போட்டோவை பார்த்ததுமே மேடையில் உஷாராய் கோலை போட்டு வாய்ப்பினை வேண்டி இருக்கிறார்.
இந்த பேட்டியை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதற்கு கூல் சுரேஷ் நல்ல உதாரணமாக கூறலாம் என்று கூறி கலாய்த்து இருக்கிறார்கள்.