தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் பக்காவாக நடித்து வரக்கூடிய முன்னணி நடிகை தான் சமந்தா.
இவர் சமீபத்தில் நடித்த யசோதா படமானது தமிழ் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளதோடு இதுவரை சுமார் 28 கோடி வரை வசூல் சாதனை புரிந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகிவிட்டது.
மேலும் இந்த படமானது இதுவரை எந்த திரைப்படத்திலும் பேசப்படாத வாடகை தாயை மையமாகக் கொண்ட கதையை கதைக்களமாகக் கொண்டுள்ளது.
மேலும் வாடகைத்தாய் முறையில் ஏற்படக்கூடிய லாப நஷ்டங்களையும் மோசடிகளையும் தோலுரித்துக் காட்டக்கூடிய கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை எடுத்திருப்பதாக படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்கள்.
அந்த வகையில் வாடகை தாயை வைத்து மோசடி செய்யும் ஆஸ்பத்திரிக்கு படத்தில் ஒரு பெயர் வைத்துள்ளனர். இந்த பெயர் தான் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. நிஜமாகவே ஹைதராபாத்தில் படத்தில் குறிப்பிட்ட பெயரில் ஒரு ஹாஸ்பிடல் இயங்கி வருகிறது.
இந்த ஹாஸ்பிடல் நிர்வாகம்தான் தற்போது யசோதா படத்திற்கு எதிராக ஹைட்ரபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கை தொடர்ந்துள்ளது. மேலும் இதில் அவர்களது ஆஸ்பத்திரிக்கு களங்கம் ஏற்படும் வகையில் யசோதா படம் உள்ளதால் அதை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஓ டி டி தளத்தில் யசோதா படத்தை அடுத்த மாதம் டிசம்பர் 19 வரை வெளியிட தடை விதித்துள்ளது. அத்தோடு மட்டுமல்லாமல் பட நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.
இதனை அடுத்து யசோதா படத்தை இனி ஓடிடியில் அந்த குறிப்பிட்ட காலக்கெடு வரை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.