“எண்ணி எட்டே நாள்..! ” – உங்கள் பாத வெடிப்பு குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்..!

இன்று சிறுவயதில் இருப்பவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாத வெடிப்பால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் இவர்கள் முகத்துக்கும் சருமத்துக்கும் தரக்கூடிய முக்கியத்துவத்தை பாத வெடிப்பு பாராமரிப்பில் காட்டவில்லை என்று தான் கூற வேண்டும். உங்கள் பாதம் ஆரோக்கியமாக இருந்தாலே எந்த விதமான வியாதிகளும் ஏற்படாது என்று கூறலாம்.

 இப்படிப்பட்ட நீங்கள் உங்கள் பாதத்தை எப்படி பராமரித்து பாத வெடிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பாதங்களில் இருக்கக்கூடிய நரம்புகளை அவ்வப்போது மசாஜ் செய்து தூண்டி விடும்போது உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆவதோடு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும்.

 உங்கள் பாதங்களில் வெடிப்பு லேசாக தோன்றும் போதே நீங்கள் அவற்றை கண்ணும் கருத்துமாக கவனித்து விட வேண்டும். அதை விடுத்து அலசியமாக விடுவதின் மூலம் அந்த வெடிப்பு பாலம் பாலமாக வெடித்து வலியும் எரிச்சலையும் உங்களுக்கு ஏற்படுத்தி விடும்.

மேலும் பாதங்களில் இருக்கக்கூடிய நகங்களை முறையாக வெட்டி வெளியே செல்லும்போது காலணி போட்டு நடப்பது மிகவும் நல்லது.

மருதாணி இலையுடன் கிழங்கு மஞ்சளை பொடியாக்கி நன்கு அரைத்து இரவு உறங்குவதற்கு முன்பு பாதங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி வெடிப்பு இருக்கும் பகுதியில் அதை போட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்வதின் மூலம் பாத வெடிப்பு குணமாகி பாதம் பார்ப்பதற்கு பளிச்சென்று மாறிவிடும்.

ஆரோக்கியத்திலும் அபரிமிதமான பங்கெடுக்கக்கூடிய எலுமிச்சை சாறை ஓய்வு நேரம் கிடைக்கும் போது எடுத்து அதை உங்கள் பாதங்களில் இருக்கக்கூடிய வெடிப்புகளில் நன்கு தேய்த்து விடவும்.

இந்த சாறினை வெந்நீரில் கலந்து இளம் சூடாக இருக்கும் போது அதை உங்கள் பாதத்தில் சிறிது நேரம் வைப்பது நல்லது.

பாதம் ஊறிய பிறகு நீங்கள் மஞ்சியை கொண்டு நன்கு தேய்க்கும் போது இறந்த செல்கள்  அனைத்தும் வெளியேறி பாதத்தில் உள்ள வெடிப்பும் குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 அதுபோலவே வெண்ணீரோடு சிறிதளவு உப்பை போட்டு ஷாம்பு ஊற்றி நன்கு கலக்கி அந்த கலவையில் உங்கள் கால்களை வைத்திருந்து அதன் பிறகு சுத்தப்படுத்துவதின் மூலம் வெடிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

மஞ்சத்தூளை நல்லெண்ணெய்யில் கலந்து அதை உங்கள் பாத வெடிப்புகளில் அப்ளை செய்து விட்டு மறுநாள் காலை குளிக்கும்போது பாதங்களில் இருக்கும் வெடிப்புகளில் இருந்து ரத்தம் வருவது வழி போன்றவை தடைப்படும்.

 வறண்ட பாதத்தை நீங்கள் அவ்வப்போது எண்ணெயை கொண்டு மசாஜ் செய்யலாம். குறிப்பாக ஆலிவ் ஆயில், பாதாமாயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை நீங்கள் கால் விரல்கள் மற்றும் காலின் குதிங்கால் பகுதியில் மசாஜ் செய்வதின் மூலம் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …