” சத்து மிக்க களாக்காய் ஊறுகாய்..!” – யம்மி யம்மி டேஸ்ட்டில் நீங்களும் செய்யலாம்..!

90 கிட்ஸ்  ஃபேவரிட் குறுந்தீனியாக இருந்த இந்த களாக்காய் கிராமப்புற பகுதிகளில் அதிகளவு கிடைக்கும். புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையில் இருக்கும் இந்த காயை லேசாக உப்பில் தொட்டு சாப்பிட்டால் நாவில் எச்சில் ஊறும்.

 அதுமட்டுமல்லாமல் பார்ப்பவர்களின் நாவிலும் எச்சிலை வரவழைக்கக் கூடிய அளவு இதன் தன்மை இருப்பதால் இதை விரும்பி பிள்ளைகள் அனைவரும் சாப்பிடுவார்கள்.

இன்றும் கிராமப்புறங்களில் எப்போதோ கிடைக்கும் பலாக்காயை விட களா காய் எவ்வளவோ மேல் என்று ஒரு பழமொழி வழக்கத்தில் உள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இரும்புச்சத்து தாதுக்கள் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவற்றை தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

அப்படிப்பட்ட களா காயை கொண்டு அற்புதமான முறையில் செய்யக்கூடிய ஊறுகாயை எப்படி செய்யலாம் என்பதை இப்போது காணலாம்.

களாக்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்

 1.களாக்காய் கால் கிலோ

2.நல்லெண்ணெய்  100 மில்லி

 3.மிளகாய் தூள் 50 கிராம்

4.உப்பு தேவையான அளவு

5.வினிக்கர் தேவையான இல் பயன்படுத்திக் கொள்ளலாம்

6.கடுகு 25 கிராம்

7.பெருங்காயம்

 செய்முறை

முதலில் களா காயை நன்கு நீரில் அலசி கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த காயின் நடுப்பகுதியை மட்டும் அப்படியே கீறி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பை ஆன் செய்துவிட்டு  வாணலியை வைக்கவும். வாணலி சூடான பிறகு நல்லெண்ணெயை அதில் விடவும். இதனை அடுத்து நறுக்கி வைத்திருக்கும் களாக்காயை அதில் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு தேவையான அளவு உப்பை சேர்த்து மீண்டும் அந்த காய் சுண்டும் வரை கிளரவும். அவ்வாறு இழக்கும் போது சில நிமிடம் கழித்து அதில் மிளகாய்த்தூளை போட்டு விட்டு நன்கு கிளறவும்.

நீங்கள் நன்கு கிளறிய நிலையில் எடுத்து வைத்திருக்கும் கடுகை மற்றொரு சட்டியில் போட்டு லேசாக வறுத்து பொடி செய்து எந்த ஊறுகாய் கலவையின் மீது கொட்டி விட்டு மீண்டும் கிளறி விடவும்.

 கடைசியாக சிறிதளவு பெருங்காயத் தூளை போட்டு விட வேண்டும். இப்போது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கலாக்காய் ஊறுகாய் தயார்.

 இதை நீண்ட நாட்கள் வைத்திருக்க விரும்பினால் நீங்கள் சிறிதளவு வினிகரை இதனோடு சேர்த்தால் போதுமானது குறைந்தபட்சம் ஒரு ஒரு மாதத்தில் இருந்து இரண்டு மாதங்கள் வரை அப்படியே இருக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …