வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

 மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்பார்கள் அந்த வரிசையில் வெள்ளரியிலும் எண்ணற்ற  பயன்கள் உள்ளது. அதுவும் குறிப்பாக  பெண்கள் விரும்பும் அழகை அள்ளித் தரக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.

அழகு பராமரிப்பில் எண்ணற்ற வழிகளில் பயன்படுத்தக்கூடிய வெள்ளரிக்காயின் நன்மைகள் அளப்பரியது. அதனால் என்னென்ன நன்மைகள் நமது சருமத்துக்கு கிடைக்கிறது என்பதை எந்த கட்டுரையில் காணலாம்.

வெள்ளரியில் ஒளிந்திருக்கும் ரகசியம்:

 வெள்ளரிக்காய் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்க வல்லது. மேலும் இதில் 96 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் இதை உட்கொள்வதின் மூலம் அல்லது பயன்படுத்துவதன் மூலம் முகத்துக்கு தேவையான மாயசரைசிங்கை அதை இயற்கையாகவே தந்து விடுகிறது. மேலும் சருமத்தில் இருக்க வேண்டிய ஈரப்பதத்தை இது தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

முகத்தில் அடிக்கடி வழியக்கூடிய எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி பளபளப்பாக வைத்துக்கொள்ள இந்த வெள்ளரிக்காய் உதவி செய்கிறது. மேலும் சருமத்தில் இருக்கக்கூடிய துளைகளை அடைத்து கொள்ள விடாமல் தனித்துவமாக பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள உதவுவதால் எப்போதும் புத்துணர்வோடு இருக்க முடியும்.

 மேலும் சூரிய ஒளியினால் ஏற்படக்கூடிய கருமை நிறத்தை முகத்தில் இருந்து அகற்றி சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க கூடிய ஒரு அரணாக இது விளங்குகிறது.

 அது மட்டுமல்லாமல் தோளில் அலர்ஜி ஏற்படுவது ஏற்படுவதை தடுக்க உதவி செய்கிறது. கண்களில் காணப்படும் கருவளையத்தை போக்க கண்களில் இரண்டு துண்டு வெள்ளரிக்காய் பிஞ்சை நறுக்கி வைத்து கண்களில் வைத்த விட வேண்டும்.

 இவ்வாறு செய்வதால் கருவளையம் நீங்கி கண்களில் ஏற்படும் சோர்வு தணியும். பெண்களுக்கு ஏற்படும் முகச் சுருக்கம், சுருக்கக் கோடுகள் மறைய இளமையில் எப்படி இருந்ததோ அப்படியே வைத்துக்கொள்ள இந்த வெள்ளரிக்காய் உதவி செய்கிறது.

 வயதான தோற்றத்தை சுருக்கங்கள் மூலம் வெளிப்படுத்துவதை தயக்கமாக நினைக்கும் நீங்கள் வெள்ளரிக்காயை பயன்படுத்தினால் போதும்.

பெண்கள் நீளமான கூந்தலை வேண்டி இருப்பவர்கள் வெள்ளரிக்காயை பயன்படுத்தி வெள்ளரிக்காய் ஜூசை வாரத்தில் இரண்டு நாள் குடித்து வந்தால் கூந்தல் நீளமாக வளரும். மேலும் முடிக்கு கருமை நிறத்தை அதிகளவு தருவதோடு இது பளபளப்பாக கூந்தல் மின்ன உதவி செய்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam