“அழகுக் கலையில் வெள்ளரிக்காய்..! ” – அல்ட்ரா மாடல் அழகியாக மாற இத ஃபாலோ பண்ணுங்க..!

என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப உங்கள் அழகுக்கு மேலும்  மெருகு சேர்க்கின்ற வெள்ளரிக்காய்  முக அழகு மற்றும் சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 எனவே உங்கள் சருமத்தை பராமரிக்க எந்த வெள்ளரிக்காயை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அழகுக் கலையில் வெள்ளரிக்காய்

👌 வெள்ளரிக்காயை அப்படியே அரைத்து ஜூஸ் ஆக்கி உங்கள் சருமத்தில் தடவிக் கொள்வதின் மூலம் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.

 👌அதிகப்படியாக முகத்திலும் சருமங்களிலும் எண்ணெய் வழிகிறது என்று கவலைப்படுபவர்கள் இதே ஜூசை நீங்கள் உங்கள் முகத்திலும் கைகளிலும் அப்ளை செய்வதின் மூலம் எண்ணெய்  வழிதல் கட்டுப்படுத்தப்படும்.

 👌96 சதவீதம் நீர் சத்தை கொண்டிருக்க கூடிய இந்த வெள்ளரிக்காயை முகத்திற்கு பேஸ் பேக்காக நீங்கள் போடுவதின் மூலம் உங்கள் முகத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கே மாய்ஸ்சரைசர் எதுவும் தேவையில்லை.

 👌மேலும் வறண்டு இருக்கும் உங்கள் சருமத்திற்கு போதுமான அளவு நீர் சத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா  கதிர்களால் ஏற்படக்கூடிய சரும பாதிப்புகளை தடுத்து நிறுத்துகிறது.

👌மேலும் முகத்தில் இருக்கும் முகச்சுருக்கம் மேலும் சருமச் சுருக்கங்கள் முழுவதையும் நீக்கக்கூடிய அற்புத ஆற்றல் கொண்ட இந்த வெள்ளரிக்காயை வாரத்தில் மூன்று முறை நீங்கள் அரைத்து முகத்திலும் உங்கள் சருமத்திலும் பூசி வந்தால் இளமை ஊஞ்சலாடும்.

👌  கருப்பாக உங்கள் முகம் அழுக்காக இருக்கிறது என்றால் சிறிதளவு மஞ்சள், புதினா இவற்றோடு இந்த வெள்ளரியை சேர்த்து நன்கு அரைத்து பேஸ் பேக்காக உங்கள் முகத்தில் போட்டு வாருங்கள். இதனை குறைந்தது மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்தால் நீங்களும் வெள்ளைக்காரியை போல வெள்ளையாக மாறிவிடுவீர்கள்.

👌சருமத்தில் ஏற்படுகின்ற தோல் அலர்ஜிகளை சரி செய்யக்கூடிய சக்தி எந்த வெள்ளரிக்காய்க்கு உள்ளது. மேலும் சருமங்களில் ஆங்காங்கு இருக்கும் கருப்பு தட்டுகளை அகற்றக் கூடிய சக்தி  இதற்கு உள்ளது.

 👌நீளமான முடியை விரும்பும் பெண்கள் வாரத்தில் இரண்டு முறை வெள்ளரி ஜூசை பருகினாலே போதும். கருகருவென நீளமான கூந்தல் உங்களுக்கு கிடைக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam