“அடி ஆத்தி தயிர இப்படி யூஸ் பண்ணிணா முடி உதிராதா..!” – முடி உதிர்வு கவலை வேண்டாம்… இத்தன நாள் தெரியாம போச்சே…!!

தற்போது உள்ள தலைமுறைக்கு மிகவும் பெரிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்தல் ஆகும். இந்தப் முடி உதிர்வு பிரச்சனையை தீர்ப்பதற்காக பல வழிகளை பயன்படுத்தியும் அவர்களுக்கு ரிசல்ட் என்னவோ அவர்கள் மனசுக்கு ஏற்றபடி அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

 அப்படிப்பட்டவர்கள் முடி உதிர்கிறது என்று இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் தயிரைக் கொண்டு உங்கள் முடி உதிர்வதை கட்டுப்படுத்த முடியும். இதனை உறுதி செய்யும் விதமாக பயோடெக்னாலஜி தேசிய மையம் சில ஆய்வுகளின் மூலம் தயிர் உச்சந்தலை ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது என்பதை  தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

இது தலைமுடிகளில் ஏற்படக்கூடிய முடி பிளவை தடுக்க உதவி செய்வதோடு அதன் வறட்சியை நீக்கி பளபளப்பான தன்மையை கொடுக்கிறது.

எனவே நீங்கள் தயிரோடு சிறிதளவு கற்றாழை ஜெல்லை சேர்த்துக்கொண்டு இந்த மாஸ்கை உங்கள் தலைமுடி முழுவதும் உச்சந்தலையில் இருந்து நன்கு முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து விடவும்.

பின்னர் இந்த ஹேர் மாஸ்கை நீங்கள் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு உங்கள் தலை முடியை வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவி விடவும்.

இப்படி தயிரையும்  கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நீங்கள் உங்கள் தலைக்கு போட்டு குளிப்பதை மாதத்தில் நான்கு ஐந்து முறை செய்வதின் மூலம் முடி உதிர்தல் ஏற்படாது.

மேலும் வறண்ட கூந்தல் உள்ளவர்கள் தயிர், கற்றாழை சாறு இதனோடு ஒரு துண்டு வாழைப்பழத்தையும் போட்டு நன்கு மசித்து சேர்த்து தடவி குளித்தால் முடியின் வறட்சியை நீங்கிவிடும்.

சிம்பிளான இந்த வழியை நீங்கள் பயன்படுத்தினால் எண்ணற்ற நன்மைகளை விரைவில் பெறுவதோடு முடி உதிர்தல் தொல்லையிலிருந்து பைசா செலவில்லாமல்  விடுபடலாம்.

 மேலும் இந்த வழியை நீங்கள் ஃபாலோ செய்து பாருங்கள். கட்டாயம் உங்கள் முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வாக இது அமையும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …