உங்கள் சுருட்டை முடியை ஸ்ட்ரைட்டாக்க இயற்கையான வழி என்னென்ன தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

எனக்கு சுருட்டை முடியாக இருப்பதால் நான் விரும்பிய ஹேர் ஸ்டைலை என்னால் செய்து கொள்ள முடியவில்லை என்று கவலைப்படுபவர்கள் இனி அது பற்றி கவலைப்பட வேண்டாம். எவ்வளவு தான் உபகரணங்கள் இருந்தாலும் அந்த கருவிகளைக் கொண்டு நீங்கள்முடியை ஸ்ட்ரேட் ஆக்கும் போது ஏற்படக்கூடிய பாதிப்புகள் உங்கள் முடிகளுக்கு அதிகமாக இருக்கும்.

 எனவே ஹேர் ஸ்ட்ரைட்டரை பயன்படுத்தி நீங்கள் ஹேரை ஸ்ட்ரீட்டாக மாற்றாமல் இயற்கையான வழியை பயன்படுத்தி எப்படி ஸ்ட்ரைட் ஆக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

  1. வடித்த கஞ்சியும்  கற்றாழை ஜெல்லும்

 உங்கள் சூருட்டை முடியை நேராக மாற்றுவதற்கு உங்கள் வீட்டில் வடித்த கஞ்சி இருந்தால் அந்த கஞ்சியை ஒருநாள் அப்படியே புளிக்க விட்டு விடுங்கள். பிறகு மறுநாள் இந்த கஞ்சியில்  கற்றாழை ஜெல்லை நன்றாக கலந்து விடுங்கள்.

 இதனை அடுத்து இந்த கஞ்சி மற்றும் கற்றாழை ஜெல் சேர்ந்த கலவையை உங்கள் முடிகளின் வேர்க்காலில் இருந்து நுனிவரை நன்கு ஒரு ஹேர் பேக் போல் பூசி விடுங்கள்.

 குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது இந்த பூச்சு அப்படியே இருக்கட்டும். இதனை அடுத்து நீங்கள் சற்று குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்து விடுங்கள். நீங்கள் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூ சீஹக்காய் எதையும் பயன்படுத்த வேண்டாம்.இப்போது சுருட்டையாக இருந்த உங்கள் முடி சற்றே ஸ்ட்ரைட்டாக மாறி இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

  1. முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் கடலை மாவு

 முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு இரண்டு முட்டைகளில் இருக்கும் வெள்ளை கருவை மட்டும் நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 இந்த வெள்ளை கருவோடு சிறிதளவு கடலை மாவை சேர்ந்து சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். அடுத்து இந்த பேஸ்ட்டை உங்கள் தலையில் ஹேர் பேக்கை போல நன்கு அப்ளை செய்து கொள்ளவும்.

 இதனை அடுத்து குறைந்தபட்சம் அரை மணி நேர இடைவெளியில் நீங்கள் உங்கள் தலையை அலசி நன்கு குளிக்கலாம்.

இப்போது உங்கள் தலைமுடியானது அதிகளவு சுருட்டை தன்மையை இழந்து நேராகவும் மிருதுவாகவும் இருப்பதால் நீங்கள் விரும்பிய ஹேர் ஸ்டைலை உங்களுக்கு எளிதாக செய்து கொள்ள முடியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …