“மின் கட்டணம் எகிறி அடிக்கிறதா..!” – கவலை வேண்டாம் இந்த டிப்சை ஃபாலோ பண்ணி கட்டுக்குள் கொண்டு வாங்க..!!

மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு இன்று மின்சார பயன்பாடு வீடுகளில் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது. மேலும் மின் பொருட்களின் எண்ணிக்கையும் பல்கி பெருகிவிட்டதால் மின்சார சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற மின்சார கட்டணத்தை நாம் செலுத்த வேண்டி இருக்கிறது.

என்ன செய்தாலும் எங்கள் வீட்டில் கரண்ட் பில் எகிறி இருக்கிறது என்று புலம்பக் கூடியவர்கள் இனிவரும் கோடையில் ஃபேன் முழுவதும் சுற்றி, ஏசியும் ஓடி கரண்ட் பில் எகிற வைக்கும் என்று கவலைப்படக்கூடிய அனைவரும் இந்த டிப்ஸை ஃபாலோ செய்தால் கட்டாயம் உங்கள் மின் கட்டணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.

கரண்ட் பில்லை குறைக்க கூடிய வழிகள்

💐 உங்கள் வீட்டில் தேவையில்லாத இடங்களில் எரியக்கூடிய விளக்குகளை தயவுசெய்து உடனே அணைத்து விடுங்கள். அதுவும் இல்லாமல் ஆளில்லாத இடத்தில் கூடி ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறிகளை நீங்கள் பக்குவமாக பார்த்து அனைத்து விடுவது உங்களது பில் இரட்டிப்பாவதை தடுக்க உதவி செய்யும்.

💐 சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வந்து அறைகள் வெளிச்சமாக இருக்கும்படி உங்கள் வீடுகளை கட்டுவது மிகவும் நல்லது. இதனால் பகல் நேரத்தில் நீங்கள் மின்சார பல்புகளை எரிய விட வேண்டிய அவசியம் இல்லை.

💐 உங்கள் வீடுகளில் இருக்கும் சுவர்களுக்கு வண்ணம் வீசும் போது டார்க் கலரை தவிர்த்து விட்டு இளம் நிறத்தை அடித்தால் வெளிச்சம் பளிச்சென்று உங்களுக்கு நன்றாக தெரியும்.

💐 குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விடுத்து தற்போது வந்துள்ள எல்இடி விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் மின்சார சிக்கனத்தை நீங்கள் கடைப்பிடிக்க முடியும்.

💐மேலும் பழைய வீடுகளில் பயன்படுத்தப்படும் டியூப் லைட் சோக்கை மாற்றி எலக்ட்ரானிக் சோக்குகளை பயன்படுத்துவதின் மூலமும் நீங்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தலாம். மேலும் மின்விசிறிகள் குறைந்த எடையோடு இருப்பதை பார்த்து வாங்குங்கள்.

💐 வீடுகளில் இருக்கும் வாட்டர் ஹீட்டர் களை பயன்படுத்தும் போது தேவையான போது ஹீட்டரை போட்டு சூடு ஏறியவுடன் உடனே அணைத்து விடுங்கள்.

💐வீடுகளில் பயன்படுத்தப்படும் இன்டக்சன் ஸ்டவ்வ்களில் அகலமாக இருக்கும் பாத்திரங்களை மட்டும் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரம் வீணாவது தவிர்க்கப்படும்.

💐ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொருவராக தனித்தனியாக உட்கார்ந்து டிவி பார்ப்பதை விடுத்து விட்டு ஒரே அறையில் ஒரு டிவியை பயன்படுத்தும் போது உங்களுக்கு அதிக அளவு மின் கட்டணம் வராது.

💐 மாலை நேரங்களில் வீடுகளில் பேனை போடாமல் சில மணி நேரங்கள் நீங்கள் வெளியே இருந்து அனைவரும் ஒன்றாக சிரித்து பேசி மகிழ்வதன் மூலம் மன அழுத்தம் குறைவதோடு மட்டுமல்லாமல் மின்சார சிக்கனமும் ஏற்படும்.

💐 பிரிட்ஜ்களில் தேவையில்லாத பொருட்களை வைக்காதீர்கள். அப்படி வைக்கும் போது உங்களுக்கு மின் கட்டணம் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து தேவையான பொருட்களை தேவையான நேரம் மற்றும் வைத்து பயன்படுத்துங்கள்.

 மேற்குரிய இந்த வழிமுறைகளை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் மின்கட்டணத்தில் ஒரு சிறிய பகுதியை நீங்கள் மிச்சப்படுத்தலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …