“பருப்பு பொடியை ஓரம் கட்டும் சத்து நிறைந்த கருவேப்பிலை பொடி..! சுட சுட சாப்பிட்டால் சொர்க்கமே உன் பக்கம்..!

கருவேப்பிலை எண்ணற்ற சத்துக்கள் இருப்பதோடு பயன்களும் உள்ளது. ஆனால் இந்த கருவேப்பிலையை தேவையில்லை என்று நினைத்து ஒதுக்கி விடுபவர்கள் ஏராளம் பேர் உள்ளார்கள். ஆனால் இந்த கருவேப்பிலையை கொண்டு கருவேப்பிலை பொடியை செய்து நாம் சுடச்சுட சாப்பாட்டில் சாப்பிடும் போது அதனுடைய சுவைக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று கூறலாம்.

அந்த அளவு சுவையாக இருப்பதோடு உடலுக்கு தேவையான இன்றியமையாத ஊட்டச்சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் கருவேப்பிலை பொடியை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

 கருவேப்பிலை பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்

1.கருவேப்பிலை இரண்டு கப்

2.வரமிளகாய் நான்கு

3.உளுத்தம் பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன்

4.தேங்காய் ஒரு கப்

5. பெருங்காயம் சிறிதளவு

6.தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் கருவேப்பிலை இலைகளை கழுவி சிறிது நேரம் உலர்த்த வேண்டும். இதன் பின்பு அடுப்பில் வாணிலியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை.

அப்படியே உளுந்து பருப்பை போட்டு டிரையாக பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் மிளகாயை போட்டு வறுத்து விடவும்.

பின்னர் துருவி வைத்து இருக்கும் தேங்காய் ஒரு கப்பை போட்டு பொன் நிறமாகும் வரை நன்கு வறுக்கவும். இப்போது இதனோடு சிறிதளவு உப்பு தேவையான அளவு பெருங்காயத்தூள் இவற்றை சேர்த்து விடுங்கள்.

 இந்த கலவையானது  சூடு ஆறும் வரை காத்திருக்கவும். இதனை அடுத்து சிவப்பு மிளகாய், தேங்காய், பெருங்காயம், உப்பு மற்றும் உலர வைத்திருக்கும் கருவேப்பிலையும் போட்டு நன்றாக அரைக்கவும்.

 இதன் பின்னர் இந்தத் தூள் கொறை கொறை என்று இருக்கும் பட்சத்தில் மீண்டும் நான்கு, ஐந்து முறை மிக்ஸியை ஓட்ட விடவும். இப்போது பொடி நைசாக இருக்கும்.

 இந்த பொடியை சுடச்சுட இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். இல்லையெனில் சுடச்சுட சாதம் வைத்து நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நீங்களும் ஒருமுறை எந்த கருவேப்பிலை பொடியை செய்து பார்த்து எப்படி உள்ளது என்று கூறுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …