தமிழ் சினிமாவில் 1990களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படம் காதல் கோட்டை. இயக்குநர் அகத்தியன் இயக்கிய இந்த படம், அப்போது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
ஒரு ஆணும், பெண்ணும் நேரில் கண்களால் பார்க்காமல் உணர்வுகளால் மட்டுமே தங்களது புனிதமான காதலால், அன்பால் வாழ்க்கையில் இணைய முடியும் என்ற மையக் கருவில் இந்த படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படம் அஜீத்குமார், தேவயானி இருவரது சினிமா பயண வாழ்க்கையிலும், மிகப்பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
இயக்குநர் அகத்தியன் தொடர்ந்து சில படங்களை இயக்கினாலும், காதல் கோட்டை அளவுக்கு அவரது மற்ற படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை.
CWC கனி
இயக்குநர் அகத்தியனின் முதல் மகள் தான் கனி. இவர் இயக்குநர் திருவை திருமணம் செய்துக்கொண்டார். இவர் நடிகை விஜயலட்சுமியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை விஜயலட்சுமி சென்னை 28, அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்தவர். விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக விஜயலட்சுமி கலந்துக்கொண்டார்.
காரக்குழம்பு கனி
விஜயலட்சுமியின் சகோதரியான கனி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதனால் CWC கனி என்கின்றனர். காரக்குழம்பு கனி என்றால், அது கனி தான். அந்தளவுக்கு காரக்குழம்பு ஸ்பெஷலிஸ்ட் அவர்.
இயக்குநர் அகத்தியனின் மகளாக இருந்தும் கனி, சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால் சினிமா இயக்குநரையே மணம் புரிந்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன், மக்கள் தொலைக்காட்சியில் தமிழ் குறித்த ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி இருக்கிறார் கனி.
காரக்குழம்பு என கனியை பலரும் கிண்டலடித்தாலும் குக் வித் கோமாளி 2 சீசனில், டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர் கனி. அதனால் இப்போதும் அவர் CWC கனி.என்றுதான் அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் தனது திருமண நாளில் நடந்த கொடுமை குறித்து, நீண்ட நாட்களுக்கு பின் மனம் திறந்து பேசியிருக்கிறார் CWC கனி.
திருமண நாளில்…
அந்த நேர்காணலில் CWC கனி.கூறியதாவது, என்னுடைய திருமணம் கோவிலில் நடந்தது. எல்லோரும் வீட்டிலிருந்து கிளம்பி, கோவிலுக்கு வந்துவிட்டனர்.
ஆனால், அவசரத்தில் ஆளாளுக்கு இருந்த பரபரப்பில் என்னுடைய திருமணத்திற்கான புடவையை எடுத்து வர மறந்து விட்டார்கள்.
கோவிலில் இருந்து மீண்டும் வீட்டிற்கு வந்து புடவை எடுத்து வருவதெல்லாம் சாத்தியம் இல்லாத விஷயம் என்பதால், நான் கட்டிச் சென்ற புடவையுடன் மணவறையில் அமர வைத்து எனக்கு தாலி கட்டினார்கள்.
எனக்கு அது ஒரு விதமான வேதனையாக இருந்தது. அதை நான் மிகவும் கொடுமையாக உணர்ந்தேன்.
சோகத்தை உணர முடியும்…
என்னுடைய திருமண நாள் என்றால், எப்படி நடக்க வேண்டும் என்பதில் பெருத்த ஏமாற்றமே அதில் இருந்தது. மிகப்பெரிய ஏமாற்றமாக, வலியாக அதை உணர்ந்தேன்.
என்னுடைய திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்தீர்கள் என்றால், நான் செத்துக் கொண்டிருப்பேன். அதில் உங்களால் ஒரு சோகத்தை உணர முடியும் எனக் கூறியிருக்கிறார் CWC கனி.
ஒரு பெண்ணுக்கு திருமண நாள் என்பது வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு பொன்னான நாள்.
அதில் தாலி கட்டும் நேரத்தில் திருமண புடவை இல்லாமல் கட்டிய சேலையுடன் தாலி கட்டிக் கொள்ளும் அந்த நிமிடங்கள், வாழ்நாள் முழுக்க ஏமாற்றம்தான்.
திருமண புடவை கட்டாமல், என் கல்யாண நாள் அன்றே நடந்த கொடுமை என்ற தனது வாழ்நாள் வேதனையை, ரகசியத்தை உடைத்திருக்கிறார் CWC கனி.