தற்பொழுதெல்லாம் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்தவர் நடிகை பவித்ரா.
இவர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஆனால் எந்த திரைப்படங்களும் சொல்லுமளவிற்கு சினிமாவில் பிரபலத்தை தரவில்லை. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இதன் மூலம் இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இவர் மலையாளம் திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சதீஷ்க்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இன்னும் ஒரு இளம் நடிகரின் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி உள்ளாராம். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் ஹீரோவாக பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகர் கதிர். நடிகர் கதிருக்கு தான் பவித்ரா ஜோடியாக நடிக்க உள்ளார்.
இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் பவித்ரா.
அதன்பிறகு மாடலிங் துறையில் ஒரு சில காலங்கள் பணியாற்றியுள்ளார்.இதையடுத்து, ‘3 சீசன் ஆப் லவ் ஸ்டோரி‘ மற்றும் மலையாள படத்தில் ஜொலிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகை பவித்ரா லக்ஷ்மி, உல்லாசம் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் பல குறும்படங்களிலும் அவ்வப்போது போட்டோஷூட் செய்தும் அசத்தி வருகிறார்.இந்நிலையில், தனது இணையதளத்தில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு தகுந்தார் போல புது புது கேப்ஷன்களை பதிவிட்டு வருகிறார்.
தவறான விஷயங்களை துரத்துவதை நீங்கள் நிறுத்தும் போது சரியான விஷயங்கள் உங்களுக்கு பிடித்ததாக மாறுகின்றன என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிகின்றன.