ஆறு கால பூஜை என்றால் என்ன..? – அதற்குண்டான நேரம் என்ன..? – வாங்க பாக்கலாம்..!

இந்து சமயத் திருக்கோயில்களில் ஆறு கால நித்திய பூஜையை மேற்கொள்வதன் மூலம் அந்த கோயிலில் சக்தி அதிகரித்து வேண்டியது எல்லாவற்றையும் வினை நேரத்தில் இறைவன் கொடுப்பார் என்ற நம்பிக்கை இன்றுவரை நிலவுகிறது.

 இந்த ஆறு கால பூஜை பற்றி வேதங்களில் குறிப்பிட்ட அந்த நேரங்களில்  செய்வதின் மூலம் எண்ணற்ற பலன்கள் இந்த லோகத்திற்கு கிடைக்கிறது.

 எனவே அந்த ஆறு கால பூஜைகளின் வகைகள் என்ன எந்த நேரத்தில் அவை செய்யப்படுகிறது என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் காணலாம்.

தினமும் செய்யப்படுகின்ற ஆறு கால நித்திய பூஜை

1.உஷத்கால  பூஜை

2.கால சந்தி பூஜை

3.உச்சி கால பூஜை

4.சாய ரட்ச்சை

5.சாய ரட்ச்சை இரண்டாம் கால பூஜை

6.அர்த்த ஜாம பூஜை

1.உஷத்கால  பூஜை  காலை 6.00

சூரிய உதயத்திற்கு முன்பே செய்யப்படக்கூடிய  இந்த முதல் பூஜை ஆகம விதிப்படி சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிக்கு முன்  முடித்து விட வேண்டும் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

 மேலும் இந்த பூஜையை செய்பவர்கள் பைரவர் சன்னதியில் வைக்கப்பட்டிருக்கும் சாவியைக் கூட பூஜை செய்த பின் தான் எடுப்பார்கள்.

 மங்கள வாத்தியத்துடன் பள்ளியறை சென்று திருப்பள்ளி எழுச்சி நடக்கும். இதனை அடுத்து  உற்சவர் மற்றும் மூலவர் சிலைகளுக்கு பூஜை அபிஷேக ஆராதனையுடன் நடக்கும்.

2.கால சந்தி பூஜை காலை 8.00

சூரிய உதயத்திற்கு பிறகு ஏழரை நாழிக்குள் இந்த கால சண்டி பூஜை நடைபெற வேண்டும். இந்த பூஜையில் சூரியன் விநாயகர் துவார பாலகர்களுக்கு பூஜை நடைபெற்று அதன் பின் மூலவர் அதன் பரிவார தெய்வங்களுக்கு பூஜை நடைபெறும்.

3.உச்சி கால பூஜை பகல் 12.00

நண்பகல் நேரத்தில் நடத்தப்படக்கூடிய பூஜையை தான் உச்சிகால பூஜை என்கிறோம். இந்த பூஜையில் தூபம், தீபம் ,அலங்காரம் அனைத்தும் இருக்கும்.

அது மட்டுமல்லாமல் நெய்வேத்தியங்கள்  விநாயகரை துதித்த பின்பு துவாரபாலகர்கள் முதல் மூலவர் வரை எந்த வழிபாடு நடக்கும்.

4.சாய ரட்ச்சை மாலை 6.00

சூரியன் மறைந்து போன பிறகு மூன்றே முக்கால் நாழிக்கு பிறகு சாய்ரச் பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் விநாயகர் பூஜையை ஆரம்பித்து மூலவர் வரை நடக்கிறது. இதில் அலங்காரம், தீபம் ,நெய்வேத்தியம் அனைத்தும் இறைவனுக்காக செய்யப்படுகிறது.

5.சாய ரட்ச்சை இரண்டாம் கால பூஜை இரவு 8.00

 இரண்டாம் கால சாய்ரச்சை அல்லது இராக்காலம் விநாயகர் முதல் மூலவர்க்கான பூஜை யில் நெய்வேத்தியம் படையல் போன்றவை செய்யப்படுகிறது. பரிவார தெய்வங்களுக்கு பலி கொடுக்கப்படும் சண்டிகேஸ்வர பூதையோடு இரண்டாம் கால பூஜை நிறைவடையும்.

6.அர்த்த ஜாம பூஜை இரவு 10.00

 இந்த அர்த்த ஜாம பூசையில் மூலவருக்கு அபிஷேகம் முடிந்த பின்பு பள்ளிகளுக்கு எடுக்க எடுத்துச் செல்லப்படுவார்கள். அங்கு நறுமணங்கள் ஏலக்காய், இலவங்கம், வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை நடைபெறும். இதை பள்ளியறை பூஜை என்று அழைப்பார்கள். அடுத்து பைரவர் சன்னதியில் சாவியை வைத்து அங்கும் பூஜை செய்வதோடு பூஜை நிறைவு பெறும்.

ஆண்களின் அந்த உறுப்பு.. பெண்களுக்கு ஏற்படும் கிரஷ்.. இது தான் உண்மை.. ஐஸ்வர்யா லட்சுமி ஓப்பன் டாக்..!

Comments are closed.
Tamizhakam