டான்சர் ரமேஷ் : சமூக வலைதளங்களான டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளில் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி பெருவாரியான ரசிகர்களை பெற்றவர் டான்சர் ரமேஷ்.இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
குறிப்பாக சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் சில நிமிடங்கள் தோன்றும் காட்சியில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்திலும் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வந்த இவர் 10 மாடி உயரத்திலிருந்து குதித்து தவறான முடிவை எடுத்திருக்கிறார். இது ரசிகர்களை சோக அலையில் ஆழ்த்தி இருக்கிறது.
தன்னுடைய இணைய பக்கத்தில் பல்வேறு விதமான பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர் டான்ஸர் ரமேஷ். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த இவருக்கு சமீப காலமாகத்தான் வாழ்க்கையில் ஒரு ஏற்றம் மற்றும் வெளிச்சம் பிறந்தது.
திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இவருடைய முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
ஆரம்பத்தில் இவருடைய நடனத்தை பார்த்து கலாய் கருத்துக்களை பதிவிட்ட இணையவாசிகள் கூட ஒரு கட்டத்தில் இவருடைய ரசிகர்களாக மாறினார்கள். எந்த ஒரு பாடலை இசைத்தாலும் எந்த ஒரு நடன ஒத்திகையும் இல்லாமல் அற்புதமான நடனமாடும் திறமையை பெற்றிருக்கும் டான்ஸர் ரமேஷ் தற்போது இந்த உலகை விட்டு பிரிந்து இருக்கிறார்.
இது இணைய வட்டார மத்தியில் இணையவாசிகள் மத்தியிலும் அவருடைய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இவர் குதித்து இறந்த அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
இது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கின்றது. இவருக்கு இரண்டு மனைவிகள் என்று கூறப்படுகிறது. இவர் எந்த மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடிய இவர் தன்னுடைய ஒரு மனைவியை பார்க்க சென்று இருக்கிறார்.
அப்போதுதான் இந்த விபரீதம் நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இவருடைய மறைவு குறித்த தகவல் அறிந்த ரசிகர்கள் இவருக்கு தங்களுடைய இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.