“அக்குள் கருமை நீங்க.. பத்தே நிமிடத்தில் பளபளக்க..” – இதை மட்டும் பண்ணுங்க..!

அக்குள் கருமை நீங்க : முக அழகுக்கு முக்கிய தரும் தரக்கூடிய நபர்கள் அனைவரும் அந்தரங்கப் பகுதி மற்றும் அக்குள் பகுதியில் இருக்கக்கூடிய கருமை நிறத்தை போக்குவதற்கான முக்கியத்துவத்தை தருகிறோமா என்றால் சந்தேகம் தான்.

மேனி அழகை மட்டுமல்லாமல் சரும பராமரிப்பில் பெண்களும் ஆண்களும் இன்று போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு பல விதமான கிரீம்களை பயன்படுத்துவது அனைவருக்குமே தெரியும். எனினும் எந்த குறிப்பிட்ட பகுதியில் இருக்கக்கூடிய கருமை நிறத்தையும் துர்நாற்றத்தையும் தடுக்க இரண்டே பொருட்கள் மட்டும் போதும்.

 இதைத்தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் அக்குள் மற்றும் அந்தரங்க பகுதிகளில் இருக்கக்கூடிய கருமையை அடியோடு நம்மால் விரட்ட முடியும்.

 அக்குள் மற்றும் அந்தரங்க பகுதியில் உள்ள கருமையை விரட்ட உதவும் பொருட்கள்:

  1. 100 கிராம் அளவு கருஞ்சீரகத்தை பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  1. அதுபோலவே 100 கிராம் அளவு கடுக்காயை நன்கு பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 பயன்படுத்தும் முறை:

 100 கிராம் கருஞ்சீரக பொடி மற்றும் 100 கிராம் கடுக்காய் பொடியை கலந்து கொள்ளுங்கள். நன்றாக கலந்த இந்த கலவையோடு பன்னீர் அல்லது சிறிதளவு பால் அல்லது சுடுநீர் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன்பு அக்குள் பகுதியில் மற்றும் அந்தரங்க பகுதிகளில்  தடவி  விடுங்கள்.

 இரவில் உறங்கி காலை  எழுந்த பின்  காலை கடன்களை முடித்துவிட்டு குளிக்கும்போது இதனை தேய்த்து குளித்தால் போதுமானது.இதனை தொடர்ந்து ஒரு மாதம் முதல் இரண்டு மூன்று மாதங்கள் செய்வதின் மூலம் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கருப்பு அப்படியே நீங்கி விடுவதோடு துர்நாற்றமும் ஏற்படாது.

 இந்த இரண்டுமே மருத்துவ குணம் கொண்ட பொருட்களை என்பதால் எந்த வித பக்கவிளைவையோ அல்லது அலர்ஜியோ அது உங்களுக்கு ஏற்படுத்தாது.

எனவே சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய கருமை நிறத்தை அடியோடு அகற்ற முடியும். இதனால் உங்களுக்கு அந்தப் பகுதி கருமையாக்கி விட்டதே என்ற கவலை இருந்து விரைவில் விடுதலை பெறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version