“இதுக்கு பேரு லவ்வுன்னு சொல்றீங்களே.. – அது தான் தப்பு…” – DDயின் சர்ச்சை பேச்சுக்கு மீம்களை பறக்கவிடும் நெட்டிசன்ஸ்..!

 

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். 

 

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 

 

ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம் அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம். 

 

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் லைவ் சாட் வந்த இவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார் .

 

 

அதில் “விவாகாரத்து செய்து விட்டோமே என்று என்றாவது வருத்தப்பட்டு இருக்கிறீர்களா?” என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு “அதையெல்லாம் நாம் திரும்பிப் பார்க்கவே கூடாது, அதிலிருந்து பாடம் கற்று அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற படிக்கட்டை நோக்கி செல்ல வேண்டும்…” என்று கூறியுள்ளார். 

 

இன்னொருவர், “உங்கள் வாழ்வில் இரண்டாவது காதல் வருமா?” என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு DD, “சினிமாவை போல காதலை 2,3 என்று பிரிக்க முடியாது. எல்லாருடைய வாழ்க்கையிலும் பல காதல்கள் வருவது தவறில்லை. ஒருவர் வாழ்க்கையில் இரண்டு மூன்று காதல் என்பது நிகழத்தான் செய்யும். 

 

ஆனால் ஒரே சமயம் நாலைந்து பேரை காதலிக்கக் கூடாது” என்று ஓபனாக பேசியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள், அது தப்பு இல்ல.. ஆனால், அதுக்கு பேரு லவ்வுன்னு சொல்றீங்களே. அது தான் தப்பு என்று மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam