சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
பவர் பாண்டி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.
அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். சினிமாவில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலை காட்டியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சமூக வலைதளங்களில் படு சுட்டியாக வலம் வரும் இவர் எப்போதும் துருதுருவென இருப்பார். அந்த வகையில், சமீபத்தில், வெளிநாட்டில் நாம எல்லாம் வேற மாதிரி என்று ஆங்கில பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிடிக்கு இன்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களை குஷிப்படுத்த தொடர்ந்து புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருகிறார். தற்போது, இவர் வெள்ளை நிற உடையில் அழகு தேவதைப்போல இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த புகைப்படத்தை எடுக்க உதவி கேமரா மேன்,மேக்கப் ஆர்டிஸ்ட் என அனைவருக்கும் தனது நன்றி என கூறியுள்ளார்.