ஒரே அடியாக ஹாலிவுட் ரேஞ்சுக்கு இறங்கிய DD..! ஒவ்வொன்னும் நின்னு பேசுது..!

சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளர்களில் முக்கியமானவர் திவ்யதர்ஷினி டிடி நீலகண்டன். கல்லூரி படிப்பை முடித்த உடனே திவ்யதர்ஷினி தொகுப்பாளினியாக தனது திரை வாழ்க்கையை துவங்கினார். விஜய் டிவியில் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் டி.டி திவ்யதர்ஷினி.

சிவகார்த்திகேயன் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பிருந்தே விஜய் டிவியில் திவ்யதர்ஷினி இருந்து வருகிறார். அதனால் விஜய் டிவி பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக டிடி திவ்யதர்ஷினி இருந்து வருகிறார். 1999 ஆம் ஆண்டு சின்னத்திரை தொடர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கினார் டிடி.

சின்னத்திரையில் வரவேற்பு:

விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்கள் தீர்ப்பு என்னும் நிகழ்ச்சியில் சிறுவயதிலேயே இவர் அறிமுகமானார். அதற்கு பிறகு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய ரெக்கை கட்டிய மனசு என்கிற டிவி சீரியலில் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து நடிப்பின் மீதும் சினிமாவின் மீதும் ஆர்வம் கொண்டார் திவ்யதர்ஷினி. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று அதிலும் நடித்து வந்திருக்கிறார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி 2006 ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கியது.

அது துவங்கிய நாள் முதல் கிட்டத்தட்ட பல வருடங்கள் தொடர்ந்து ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் திவ்யதர்ஷினி. அதற்குப் பிறகு ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடிக்கு அவரது பெயரிலேயே ஒரு நிகழ்ச்சியை உருவாக்கினர் விஜய் டிவி குழுமத்தினர்.

விஜய் டிவி பிரபலம்:

காபி வித் டிடி என்கிற அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து சினிமா பிரபலங்களை பேட்டி எடுப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் டிடி. அப்படியே பல முக்கிய பிரமுகர்களை பேட்டி எடுத்ததன் மூலம்  அவர்களிடம் நட்பையும் பெற்றார் டிடி.

அதனை தொடர்ந்துதான் பிறகு தமிழ் திரை உலகில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் திரை உலகில் நிறைய படங்களில் இவர் நடித்திருக்கிறார். பவர் பாண்டி, சர்வம் தாள மையம், காபி வித் காதல் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து இன்னமும் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் கௌதம் மேனன். இவரது இயக்கத்தில் வெளியான துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கியமான முக்கியமான கதாபாத்திரத்தில் டிடி நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு கவர்ச்சியில் இறங்கிய டிடி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது. நம்ம டிடியா இது என்று ரசிகர்களே அதை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version