அப்பாவுக்கு DD செய்த சத்தியம்..! சேனல் அஸ்திவாரத்தையே மாத்திடுச்சு..!

விஜய் டிவியில் மிக அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் DD என்கிற திவ்யதர்ஷினி. DD எங்கு பேசினாலும் அவரது பேச்சு மிகவும் கவரக்கூடிய வகையில் கலகலப்பாக இருக்கும்.

DD என்கிற திவ்யதர்ஷினி

DD ஆரம்பத்தில் வீட்டில் செல்ல பிள்ளையாக வளர்ந்தவர். அப்பா பல விஷயங்களை அவருக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தார் அதிலும் DD மாணவியாக இருந்த போது, அவருடைய அப்பா ஸ்கூல் பீஸ் கட்டுவதற்காக ஸ்கூலுக்கு வரும்போது, DDயை கூட்டிக் கொண்டு போய், டிடி கையில் பணத்தை கொடுத்துதான் கட்ட சொல்லுவது வழக்கம். ஸ்கூல் படிப்பிலிருந்து கல்லூரி படிப்பு வரை அதே பழக்கத்தை பின்பற்றி இருக்கிறார்.

எந்த வேலையாக இருந்தாலும் நீயே கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் தந்தை கற்றுக் கொடுத்திருக்கிறார். அன்று முதல் DD தன்னுடைய வேலைகளை அவரே செய்திருக்கிறார். அப்படியான ஒரு காலகட்டத்தில் தான் திடீரென DD யின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது.

அப்பாவுக்கு செய்த சத்தியம்

அப்போது அந்த நேரத்தில், தன்னுடைய தந்தையிடம் DD, அப்பா நீங்க கவலைப்படாதீங்க நான் நம்முடைய குடும்பத்தை பார்த்துக்கொள்கிறேன், என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். DD சத்தியம் செய்து கொடுத்த சில மணி நேரங்களில் அவர் அப்பா இறந்திருக்கிறார்.

அதற்கு பிறகு DD, தன் அக்கா பிரியதர்ஷினி, எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடித்துக் கொண்டிருப்பவர் – இவர் குழந்தை நட்சத்திரமாக தாவணிக் கனவுகள் படத்தில் பாக்யராஜின் கடைசி தங்கையாக, சிறுமியாக நடித்திருப்பார். இவரும் நிறைய டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

குடும்பத்தின் மொத்த பாரத்தையும்…

DDயும் அவரது அக்கா பிரியதர்சனியும் இணைந்து தனது குடும்பத்தின் தங்களுடைய குடும்பத்தின் மொத்த பாரத்தையும் மொத்த சுமக்க துவங்கியுள்ளனர். கல்லூரியில் படிக்கும்போது DD தனக்கு கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்திருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க DDக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அப்போதுதான் விஜய் டிவியில் நடிக்கும் மீட்டிங்கில் DD கொடுத்த அட்வைஸ் மிகப்பெரிய அளவில் அவருக்கு ஒரு மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது. அதாவது, ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஜோடி ஒன்று ஜோடி ரெண்டு என்ற நிகழ்ச்சிகள் தான் தொடங்கியது.

ஆனால் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை போன்று ஜோடி சீசன் 1 ஜோடி சீசன் 2என்று பெயரை பயன்படுத்தலாம் என்று DD தான் மீட்டிங்கில் ஐடியா கொடுத்தாராம் அது பெரிய அளவில் விஜய் டிவிக்கு ஒர்க் ஆகியிருக்கிறது.

சிம்பு -பப்லு சண்டை

நடிகர் சிம்புவும், பப்லுவம் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் பயங்கர பிரச்னை ஏற்பட்ட போது அந்த நேரத்தில், DD அந்த சூழ்நிலையை மிகவும் கூலாக கையாண்டு சரி செய்திருந்தார். அதற்கு பிறகு தான் DD க்கு பிரபலங்களை பேட்டி எடுக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. அந்த வகையில் DD விஜய் டிவியில் டாப் தொகுப்பாளியாக இருந்தார்.

அவருக்கு திருமணம் முடிந்து சில மாதங்களுக்குள், அவருக்கும் அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த நேரத்தில் DD, நடிகை ரம்யா கிருஷ்ணனை பேட்டி எடுப்பதற்காக இருந்த போது, அவருக்கு போனில் தகவல் வந்திருக்கிறது.

வாழ்க்கை உடைந்து போய்…

அதில் அவருக்கு விவாகரத்து உறுதியான தகவல் கிடைத்திருக்கிறது. திருமண வாழ்க்கை உடைந்து போய் மன வருத்தத்தில் இருந்த DD, கேமராக்கு முன் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் சகஜமாக ஜாலியாக பேசி, பேட்டியை சிறப்பாக முடித்து இருக்கிறார்.

அதன்பிறகு தான் நான் தனியாக சென்று அழுதேன், என்று ஒரு நிகழ்ச்சியில் DD பேசியிருக்கிறார்.

வாய்ப்புகள் குறைந்தது

இப்படி பல திறமையோடு இந்த DDக்கு உடல் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு காலில் ஏற்பட்ட வலிக்காக ஆபரேஷன் செய்த நிலையில், அது தவறாக செய்யப்பட்டதால், மீண்டும் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை வந்திருக்கிறது.

ஆனால் DDயின் கால் வலி மட்டும் இன்னும் சரியாகவில்லை ஆனால் டிடியால் அதிக நேரம் நிற்க முடியாது. அதனால் DDக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது. நன்றாக இருக்கும்போது அவரை பயன்படுத்திக் கொண்ட டிவி சேனல், உடல்நிலை பிரச்னை வந்ததும் வாய்ப்புகளை குறைத்து இருக்கிறது.

தொகுப்பாளருக்கு சீட் கொடுங்க…

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய DD, தொகுப்பாளர்களுக்கு தயவு செய்து ஒரு சீட் குடுங்க. அவங்க அமர்ந்து பேட்டி எடுப்பது போல் ஏற்பாடுகள் செய்யுங்க. அவங்க 10 மணி நேரத்துக்கு மேலாக நின்று கொண்டே நிகழ்ச்சியை நடத்துவதால், அவர்களுடைய கால்கள், முதுகு பலவீனமாகி விடுகிறது என்று கூறியிருக்கிறார்.

இது பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டது. அதே நேரத்தில் DD சொன்ன ஐடியாவிற்காக பல தொகுப்பாளர் மற்றும் தொகுப்பாளினிகள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆனாலும் DD இப்போது நிகழ்ச்சிகள் காணப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கிறது.

அப்பாவுக்கு DD செய்த சத்தியத்துக்காக, சிறு வயதில் இருந்தே குடும்ப பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவரது கால் வலி, சேனல் அஸ்திவாரத்தையே அவருக்கு மாற்றி விட்டதை அறிந்து ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version