இப்படி இருப்பது தான் அழகு.. சுய ரூபத்தை காட்டிய திவ்யதர்ஷினி..! வைரலாகும் வீடியோ..!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பை பெற்றவர் டிடி திவ்யதர்ஷினி. திவ்யதர்ஷினியை பொருத்தவரை தன்னுடைய இளம் வயதிலேயே அவர் தொகுப்பாளியாக விஜய் டிவியில் அறிமுகமாகிவிட்டார்.

தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அப்போதைய காலங்களில் சின்ன திரையில் கலகலப்பாக தொகுத்து வழங்குவது என்பதை திவ்யதர்ஷினிதான் அறிமுகப்படுத்தினார்.

அதற்குப் பிறகு வந்த நிறைய தொகுப்பாளர்களும் அதனை பின்பற்றி பிறகு மிகவும் பிரபலமடைந்தனர். அப்படி பிரபலம் அடைந்தவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். அதற்கு முன்பெல்லாம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள் சாதாரணமாக நின்று பேசிவிட்டு செல்வார்கள்.

தொகுத்து வழங்குவதில் மாற்றம்:

ஆனால் ஒரு தொகுப்பாளினியாலும் கூட காமெடிகள் செய்ய முடியும். அந்த நிகழ்ச்சியை கலகலப்பாகக் கொண்டு செல்ல முடியும் என்பதை திவ்யதர்ஷினி முதல் முறையாக செய்து காட்டினார். அதனை தொடர்ந்துதான் விஜய் டிவியில் திவ்யதர்ஷினியின் பெயரிலேயே காபி வித் டிடி என்கிற நிகழ்ச்சியை துவங்கினர்.

அந்த நிகழ்ச்சிகள் சினிமாவில் உள்ள பல பிரபலங்களை பேட்டி எடுத்தார் திவ்யதர்ஷினி. அதன் மூலம் சினிமாவில் நிறைய பழக்கவழக்கங்கள் இவருக்கு கிடைத்தது. சினிமாவில் ஆரம்பகாலக்கட்டம் முதலே அவருக்கு வாய்ப்புகள் என்பது வந்து கொண்டுதான் இருந்தது.

ஆனால் திவ்யதர்ஷினிக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதில் பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை. அதனால் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவிற்குள் பெரிதாக செல்லாமலே இருந்து விட்டார் திவ்யதர்ஷினி. இந்த நிலையில் இப்போதும் பிரபலமான ஒரு நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் திவ்யதர்ஷினி இருந்து வருகிறார்.

நம் மீது பூசப்படும் வண்ணங்கள்:

சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய திவ்யதர்ஷினி பெண்கள் தினத்தை முன்னிட்டு சில விஷயங்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது சிறுவயது முதலே நம் மீது நிறைய வண்ணங்கள் பூசப்படுகின்றன.

மேக்கப் போட்டு வெள்ளையாக இருந்தால் அழகு, ஒரு நல்ல அம்மாவாக இருந்தால் அழகு. ஒரு நல்ல தங்கையாக இருந்தால் அழகு, ஒரு நல்ல மனைவியாக இருந்தால் அழகு.

நீ மற்றவர்களுக்காக உன்னை தியாகம் செய்தால் பேரழகு, நல்ல காதலியாக இருந்தால் அழகு, இப்படி எவ்வளவோ வர்ணங்கள் நம் மீது பூசப்படுகின்றன ஆனால் இந்த எந்த வண்ணமும் பூசப்படாமல் நாம் நாமாக இருப்பதுதான் உண்மையான அழகு என்று கூறி பெண்கள் தினத்திற்கு வாழ்த்துக் கூறிய திவ்யதர்ஷினி ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வீடியோதான் தற்சமயம் பெண்கள் மத்தியில் அதிக பரபரப்பாகி அதிக வைரல் ஆகி வருகிறது. பலரும் இந்த வீடியோவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version