அன்னைக்கு சிம்பு பண்ணது ஸ்க்ரிப்ட்டா.. பல நாள் கேள்விக்கு திவ்யதர்ஷினி கொடுத்த பதில்..!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக விளங்குபவர்கள் தற்போது திரையுலகில் நடிக்கின்ற நடிகைகளுக்கு இணையான அந்தஸ்து பெற்றிருந்தாலும் நேரலையில் சில சூழ்நிலைகளை பக்குவமாக கையாளக்கூடிய தொகுப்பாளினியாக திகழ்பவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி.

இவர் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர். மேலும் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி என்று சொன்னாலும் மிகையாகாது.

அன்னைக்கு சிம்பு பண்ணது ஸ்க்ரிப்ட்டா..

டிடி சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் காபி வித் டிடி இன் மூலம் புகழடைந்த இவர் திரைப்பட விருது வழங்கும் விழாக்களிலும் தனது அசத்தலான திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு அன்று நிகழ்ச்சி சென்று கொண்டிருக்க கூடிய தருணத்தில் கோபித்து அழுத வண்ணம் வெளியேறிய போது அந்த இடத்தில் டிடி எப்படி அதை கையாண்டார் என்பது பற்றி கலாட்டா மீடியாவில் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

அந்த வகையில் யாரும் எதிர்பாராத சமயத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது அங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடியவர் நடுநிலையாக செயல்பட்டு இரண்டு பக்கமும் எந்த ஒரு சேதாரமும் ஆகாமல் பார்த்து பக்குவமாக செயல் பட வேண்டும் என்று டிடி சொல்லி இருக்கிறார்.

மேலும் அந்த சமயத்தில் டிடியோடு இணைந்து பணியாற்றிய தொகுப்பாளர் தீபக் கடுமையான டென்ஷன் ஆனதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ரவுண்டு அடித்த வண்ணம் சில வார்த்தைகளை பேசியது மூலம் எனக்கு அவர் டென்ஷன் ஆகிவிட்டார் என்பது புரிந்து விட்டது.

பல நாள் கேள்விக்கு..

இந்த இடத்தில் போட்டியாளர்களையும் சமாளிக்க வேண்டும். அதே சமயத்தில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சிம்புவுக்கும் மனம் நோகாமல் பக்குவமாக நடந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருந்ததோடு டென்ஷனான தீபத்தையும் சமாளிக்கணும் என்ற எண்ணத்தில் செயல்பட்டதாக பேசியிருக்கிறார்.

இன்றெல்லாம் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதை அடுத்து இது போன்ற சூழ்நிலைகளை எளிதில் இயக்குனர் மற்றும் மற்றவர்கள் துணையோடு சமாளித்து விடலாம். 

ஆனால் அன்றெல்லாம் அப்படி அல்ல நாம் தான் அதை கையாள வேண்டும் நமக்கு எந்த ஒரு சமிக்கைகளை போன் மூலம் கொடுக்க முடியாது.

திவ்யதர்ஷினி கொடுத்த பதில்..

இது எனது கேரியரில் ஒரு மிகப்பெரிய விஷயமாக நான் கருதியதோடு அதை எப்படி சமாளித்தேன் என்று நினைத்து பார்த்தாலும் எனக்கு வியப்பு ஏற்படும்.

 

இது போன்ற சந்தர்ப்பங்களில் தொகுப்பாளர்கள் எப்பொழுதுமே நடுநிலையாக செயல்பட வேண்டியது அவசியம் என்பதை ஒவ்வொரு தொகுப்பாளரும் புரிந்து கொண்டு செயல்படக் கூடிய விதத்தில் மூத்த தொகுப்பாளனியான டிடி சொன்ன விஷயம் பலருக்கும் பயன் அளிக்கக்கூடிய வகையில் இருக்கும்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version