கர்ப்பமான நேரத்தில் அந்த இடத்துல பென்சில் தேவையா..? தீபிகா படுகோனேவுக்கு கிளாஸ் எடுக்கும் ரசிகர்கள்..!

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் மூலமாக  பாலிவுட் சினிமாவில் பிரபலமாக அறிமுகமான ஒரு சில நடிகைகளில் நடிகை தீபிகா படுகோனும் முக்கியமானவர்.

ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் என்கிற திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை தீபிகா படுகோனே. ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த அந்த திரைப்படம் பயங்கரமான வெற்றியை கொடுத்தது.

அடுத்து பாலிவுட்டின் முக்கிய நடிகையாக மாறினார் தீபிகா. எக்கச்சக்கமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டிலும் ஒரு சில திரைப்படங்களில்  தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.

 முக்கியமாக ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களில் இவரை அதிகம் பார்க்க முடியும். தமிழில் பிரபலமான சென்னை எக்ஸ்பிரஸ் மாதிரியான திரைப்படங்களில் ஷாருக்கானுடன் கதாநாயகியாக நடித்திருப்பார்.

தீபிகா படுகோனேவிற்கு வரவேற்பு:

இந்த நிலையில் சமீபத்தில் பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி வரும் கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் அந்த கல்கி அவதாரத்தை தனது கர்ப்பத்தில் கொண்டிருக்கும் தாய் கதாபத்திரமாக தீபிகா படுகோனே நடித்திருந்தார்.

இந்த ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் பெரும் வரவேற்பை பெற்றது. இது ஒரு பே இந்தியா திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், நடிகர் பசுபதி என்று ஏகப்பட்ட நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்திருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தை நாக் அஸ்வின் என்பவர் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன்தான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபகாலமாக தீபிகா படுகோன் நிஜமாகவே கர்ப்பமாகதான் இருந்து வருகிறார்.

கர்ப்ப நிலையிலும் விழாவிற்கு வருகை:

இந்த நிலையில் அவர் கல்கி திரைப்படத்தின் விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டார். நிறை மாத கர்ப்பிணி ஆகவே அதில் கலந்து கொண்டார் வருகிற செப்டம்பர் மாதம் இவருக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் பென்சில் ஹீல்ஸ் என்று அழைக்கப்படும் மெலிசான காலனியை அணிந்து  வந்த தீபிகா படுகோனே அந்த மேடையில் ஏறுவதற்கும் மிகவும் சிரமப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கு மேடையில் அமர்ந்திருந்தவர்கள் அவருக்கு உதவினர்.

முக்கியமாக அமிதாபச்சன் தீபிகா படுகோனேவை சென்று அவரது கைகளை பிடித்து மெதுவாக அவரை மேடைக்கு அழைத்து வந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பிரபலமானது.

இதனை பார்த்த சிலர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கர்ப்பத்திற்காக அணிவதற்கு காலணிகள் இருக்கின்றன. அவற்றை அணியாமல் இந்த மாதிரியான ஹில்ஸ் காலணிகளை அணிவது நல்லதல்ல என்று அவருக்கு அறிவுரை கூறியும் வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version