தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த தமிழ் திரை உலகின் மூத்த நடிகரான டெல்லி கணேசன் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார்.
இதுவரை சுமார் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தக்ஷண பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகர் டெல்லி கணேஷ்..
நடிகர் டெல்லி கணேஷ் நடிப்பில் வெளி வந்த முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் என்பதாகும் இந்த படம் 1977-ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த படத்தை இயக்குனர் கே பாலசந்தர் இயக்கி இருந்தார்.
இந்தப் படத்தில் தனது அற்புத நடிப்பினை வெளிப்படுத்திய இவருக்கு துணை நடிகர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் வந்து சேர அதை ஆசையோடு ஏற்றுக்கொண்டு பல படங்களில் நடித்து பல்வேறு வகையான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவர் நடிப்பில் வெளி வந்த சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தென்னாலி போன்ற படங்களில் இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை வெகுவாக பாராட்டி இருக்கிறார்கள்.
இவர் திரைப்படம் மட்டுமல்லாமல் இவர் தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்க கூடிய இவர் இது வரை எட்டு முக்கிய சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார் என்றால் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு..
அந்த வகையில் நடிகர் டெல்லி கணேஷ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.
இவர் 1979-ஆம் ஆண்டு வெளி வந்த பசி திரைப்படத்திற்காக தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதனை பெற்றதோடு 1994-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதையும் வென்றவர்.
1977-இல் பட்டினப்பிரவேசத்தில் ஆரம்பித்த இவரது பயணம் இன்றும் தொடர் கதையாய் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் 2012- ஆம் ஆண்டு கருவறை என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
சினிமாவில் நடிப்பதோடு நின்று விடாமல் விஷ்ணுவர்தனின் மழலை பட்டாளம் என்ற திரைப்படத்தில் பின்னணி குரல் கொடுத்து இருக்கக்கூடிய சிரஞ்சீவிக்கு 47 நாட்கள் என்ற படத்தில் பின்னணி குரல் கொடுத்து அசத்தி இருக்கிறார்.
இப்படி டெல்லி கணேஷ் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
திரைத்துறையில் நடிப்பதற்கு முன்பு அதாவது 1964 முதல் 1974 வரை சுமார் பத்து வருடம் நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் இந்திய வான்படையில் பணியாற்றி இருக்கிறார் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது.
தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
இதன் அடுத்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதால் இந்த விஷயத்தை அறிந்து கொண்ட பலரும் ஆச்சிரியத்தோடு இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
அத்தோடு டெல்லி கணேஷ் நடிப்பு பற்றி வியந்து பாராட்டி இருக்கும் பலரும் இவரது நல் ஒழுக்கத்திற்கு காரணம் விமானப்படையில் பணியாற்றிய அனுபவமாக கூட இருக்கலாம் .