மாதுளம் பழத்தால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்.

மாதுளை வரலாறு 

முந்தைய காலத்திலிருந்து பயிரிடப் படும் பழ வகையாகும். எனினும் பெர்சியா மாதுளையின் பூர்வீகமாக சொல்லப்படுகிறது.

பெர்சியாவில் இருந்து அரபு நாடுகள் வழியாக ஆப்கனிஸ்தான், சைனா இந்தியா போன்ற நாடுகளுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது.

வேறு பெயர்கள்

ஆங்கிலத்தில் போம்க்ரானைட் என்றும், ஹிந்தியில் அனார், அனார்டானா என்றும், தெலுங்கில் டனிம்மா பண்டு, டலிம்பா என்றும், கன்னடத்தில் டலிம்போ, டலிம்பாரி என்றும், மலையாளத்தில் மாதலநரங்கா, உரியன் பழம் என்று அழைக்கப்படுகிறது

தீமை செய்யும் மாதுளை

மாதுளை அனைவரும் விரும்பி  சாப்பிடும் ஓர் உணவாக பழங்களில உள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைவருக்கும் பல நன்மைகளை தருகிறது .அப்படி அனைவரும் விரும்பி உண்ணும் பழமான மாதுளம் பழம்  பல நன்மைகளை அளித்தாலும் இதனால் சில விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

மாதுளம் பழத்தால் ஏற்படும் அலர்ஜிகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. அது அரிப்பு, வீக்கம், தொண்டை எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம், காதுகளில் வீக்கம், வயிற்றுவலி மற்றும் படை நோய்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

மாதுளம்பழம் சாப்பிட்டு பத்து நிமிடத்தில் அரிப்பு தொடங்கினால் மருத்துவரை அணுகுவது நல்லது . மேலும் சில மருந்துகளை எடுக்கும்போது மாதுளம்பழத்தை தவிர்ப்பது மிக நல்லது. 

உயர் ரத்த அழுத்த மருந்துகள் சாப்பிடுபவர்கள் மாதுளம் பழத்தை எடுத்துக் கொள்ளும் போது மருத்துவரை ஆலோசித்த பின்னரே எடுத்துக்கொள்ள வேண்டும். 

நீங்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால் அதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பிருந்தே மாதுளையை தவிர்க்க வேண்டும். இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். 

இப்பழத்தை அதிகமாக உட்கொள்வது வாயு பிரச்சினைகளை ஏற்படுத்தும். இருமல் பிரச்சினை உள்ளவர்கள், மாதுளையை அதிகமாக சாப்பிடக்கூடாது.

அழுத்தத்தை குறைக்கக் கூடிய ஆற்றல் மாதுளைக்கு உள்ளது. இந்தப் பக்க விளைவுகள் அனைத்தும் தனிநபர் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தது என்று ஆய்வுகள் கூறியுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …