நைட் பார்ட்டி.. அனிருத் அதுக்கு ஓகே சொல்லிட்டாரு.. ஆனால்.. நான்.. தொகுப்பாளினி DD ஓப்பன் டாக்..!

தமிழில் பிரபலமாக உள்ள தொகுப்பாளினிகளில் மிக முக்கியமானவர் விஜே திவ்யதர்ஷினி. இவரை பொதுவாக டிடி என்று அனைவரும் அழைப்பதுண்டு. சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சமகாலத்தில் அவருக்கு இணையான அளவில் பிரபலமாக, அவரைப் போலவே தொகுப்பாளராக இருந்து வந்தவர்தான் டிடி.

அவரது சகோதரியான பிரியதர்ஷினியும் தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். தற்சமயம் அவரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் அதிகமாக பார்க்க முடியும். இந்த நிலையில் ஆரம்பத்தில் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த டிடி பிறகு சின்னத்திரையின் மீது ஆர்வம் கொண்டு மெதுவாக சின்னத்திரை பக்கம் வந்தார்.

விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது என்று கூறலாம். அதேபோல தொடர்ந்து வெள்ளித்திரைகளும் கவனம் செலுத்தி வருகிறார் டிடி. ஒரு சில திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் பிரபலம்:

சமீபத்தில் ஜீவா மற்றும் ஜெய் நடித்து வெளிவந்த காப்பி வித் காதல் திரைப்படத்தில் இவர்களின் சகோதரியாக டிடி நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது என்றே கூறலாம்.

இந்த நிலையில் அனிருத்தை ஒருமுறை பேட்டி எடுக்கும் பொழுது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அதில் கூறும் பொழுது ஒரு முறை காப்பி வித் டிடி நிகழ்ச்சியில் அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்பொழுது அவரிடம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்க வேண்டும் என்று என்னிடம் ஷோ ப்ரொடியூசர் கூறியிருந்தார். ஆனால் அந்த கேள்வியை கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் பேட்டி துவங்குவதற்கு முன்பே நாங்கள் என்ன கேள்விகளை கேட்கப் போகிறோம் என்பது அனிருத்திடம் சொல்லி விடுவோம்.

பேட்டியில் வந்த சங்கடம்:

அனிருத்தும் அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டார். இந்த நிலையில் பேட்டி தொடங்கியது முதலே டாக் பேக்கில் என்னிடம் அந்த கேள்வியை கேட்குமாறு வலியுறுத்தி வந்தனர். ஆனால் நான் அந்த கேள்வியை கேட்கவே இல்லை. பிறகு என்னை டாக் பேக்கிலேயே மிரட்டியும் கூறினார்கள்.

அப்பொழுதும் அந்த கேள்வியை நான் கேட்கவில்லை இதனை தொடர்ந்து இறுதியாக அந்த நிகழ்ச்சியும் முடிந்து விட்டது. பிறகு அனிருத்தை பார்த்த ஷோ ப்ரொடியூசர் நாங்கள் பலமுறை கூறியும் அந்த ஒரு கேள்வியை மட்டும் டிடி உங்களிடம் கேட்கவில்லை என்று கூறி இருக்கின்றனர்.

அதற்கு பதில் அளித்த அனிருத் அதனால் தான் அவர் டிடி என்று கூறி டிடியை பாராட்டி இருக்கிறார் இந்த நிகழ்வை டிடி அந்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version