மரியான் தீரன் ரெண்டையும் கலந்து ஒரு படம்..! வெளியான தேவாரா ட்ரெய்லர்..

ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியானது முதலே நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்க்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகள் அதிகரித்து வருகிறது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தார்.

ராம்சரணை விடவும் அந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். இந்த நிலையில் அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் பெரிய படங்களாக கமிட்டாகி வருகிறார். முக்கியமாக கே.ஜி.எப் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்து இவரை வைத்து ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறார்.

ஜுனியர் என்.டி.ஆர் புது எண்ட்ரி:

இதற்கு நடுவே தற்சமயம் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் திரைப்படம்தான் தேவாரா. தேவாரா திரைப்படம் குறித்து தெலுங்கு சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஏற்கனவே அனிருத் இசையில் அந்த படத்தின் பாடல்கள் இரண்டு வெளியாகி இருக்கின்றன.

அதில் முதல் பாடல் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த பாடல் நல்ல வெற்றியையும் கொடுத்திருக்கிறது. எனவே படமும் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று அந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

ட்ரெய்லரை பார்க்கும்போது தீரன் திரைப்படத்தில் வருவது போலவே இந்த திரைப்படத்திலும் கொள்ளை செய்யும் ஒரு கும்பல் வைத்துதான் கதை செல்கிறது. அந்த கும்பலின் தலைவன்தான் படத்தில் வில்லனாக வருகிறான். ஹிந்தி நடிகர் சைஃப் அலிக்கான் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

தேவாரா ட்ரெய்லர்

படத்தில் மொத்தம் இரண்டு ஜூனியர் என்.டி.ஆர் இருப்பதாக தெரிகிறது. அதில் அப்பா கதாபாத்திரம் முதலில் அந்த கொள்ளை கடத்தல் கும்பலை எதிர்க்கிறது. அதற்குப் பிறகு அவரது அப்பா இறந்து வருகிறார். பிள்ளையாக பிறக்கும் அடுத்த ஜூனியர் என்.டி.ஆர் கதாபாத்திரம் எதற்கெடுத்தாலும் பயப்படும் கதாபாத்திரமாக இருக்கிறது.

ஆனால் அவரது தந்தை அந்த கடற்கரையை காப்பாற்றும் காவலராக இருந்திருக்கிறார். இந்த நிலையில் தனது தந்தைக்காக இந்த கதாபாத்திரம் எப்படி பழிவாங்க போகிறது என்பதுதான் கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகின்றனர்.

மரியா தீரன் ரெண்டையும் கலந்து

ஆனால் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது முழுமையாக தெரியவில்லை. இருந்தாலும் கூட இந்த கதை கருவானது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட மரியான் திரைப்படம் மற்றும் தீரன் திரைப்படத்தின் ஒரு கலவையாக தேவாரா இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் இரண்டாவது பாடலாக வந்த காதல் பாடல் ஒரு ஹிந்தி பாடலின் காப்பி என்று சர்ச்சைகள் இருந்து வந்தன. ஆனால் படத்தைப் பொறுத்தவரை அந்த சர்ச்சைகள் படத்தை பெரிதாக பாதிக்காது என்று தருகிறது. டிரைலர் வந்தது முதல் படத்தின் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து இருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam