தேவயானி தம்பி என்ன இப்படி பாக்குறான்..பல ஆண்டு ரகசியத்தை உடைத்த ராஜகுமாரன்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென் இந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை ரசிகர்களின் மத்தியில் பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி.

இவர் நடிப்பில் வெளி வந்த காதல் கோட்டை முதல் பல படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் அதிகளவு வசூலை வாரி தந்த படங்களும் உள்ளது என்று சொல்லலாம்.

அந்த வகையில் சூரிய வம்சம் படத்தில் இவர் செய்த இட்லி உப்புமா? இன்று வரை அனைவராலும் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒன்றாகவும் பலர் வீட்டில் அவசர உணவாகவும் மாறி உள்ளது.

நடிகை தேவயானியின் தம்பி..

இந்நிலையில் நடிகை தேவயானி திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே விக்ரமணியிடம் உதவி இயக்குனராக இருக்கக்கூடிய பணி செய்த ராஜகுமாரன் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் ராஜகுமாரன் தேவயானியை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் நடந்தது. தற்போது இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்து கலக்கி வரும் நடிகை தேவயானி சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கோலங்கள் சீரியலில் பக்காவாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் வீட்டில் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார் .

அத்துடன் சில மாதங்களுக்கு முன்பு தன் கணவர் மற்றும் இரு மகளுடன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த விஷயங்கள் இணையத்தில் வைரலானது உங்கள் நினைவில் இருக்கலாம்.

என்ன இப்படி பார்க்கிறான்..

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தேவையானியின் கணவர் அளித்த பேட்டி தற்போது வைரல் ஆக்கிவிட்டது .அதற்கு காரணம் தேவயானி காதலித்து திருமணம் செய்த பிறகு அவரது தம்பி நகுல் தன்னிடம் எப்படி இருக்கிறார் என்பது பற்றி அவர் சொன்ன விஷயம் தான்.

இதில் ராஜகுமாரன் பேசும் போது நான் தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டது நகுலுக்கு மிகப்பெரிய தேசத் துரோகம் போல் உள்ளது.

இந்நிலையில் நாங்கள் திருமணம் செய்து கொண்ட விஷயம் என் அம்மாவுக்கு தெரியாது. மேலும் காவல் நிலையத்தில் சென்று பார்த்து விசாரித்த பின்பு தான் தெரிய வந்தது.

இதனை அடுத்து ஒரு வாரம் கழித்து தான் நான் வீட்டுக்கு சென்றேன். இதை தொடர்ந்து நகுல் என் கூட பேசுவதே கிடையாது. அவர்களுக்குள் மட்டுமே பேசிக் கொள்வார்கள் என்று உண்மையை உளறியதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திகைத்து விட்டார்கள்.

பல ஆண்டு ரகசியத்தை உடைத்த ராஜகுமாரன்..

இதனை அடுத்து இத்தனை நாள் இந்த விஷயத்தை பகிராத இயக்குனர் ராஜகுமாரன் தற்போது இந்த விஷயத்தை சொல்லியதை அடுத்து பல ஆண்டு ரகசியத்தை உடைத்து இருக்கிறார் என்று ரசிகர்கள் சொன்னதோடு விரைவில் நகுல் தனது அக்கா கணவரிடம் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் உள்ளது.

எனவே நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை பற்றி கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version