தொட்டாசிணுங்கி படத்தில் நீச்சல் உடையில் நடிக்கும் போது.. நடிகை Devayani ஓப்பன் டாக்..!

சுஷ்மா என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை Devayani தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒரு சில ஹிந்தி மற்றும் வங்காள மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கோலங்கள் என்ற நெடுந்தொடரில் கதாநாயகியாக நடித்த இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை தேவயானி..

நடிகை தேவயானியை பொருத்த வரை சாத் பென்சொமி என்ற வங்கப்படத்தில் தான் முதல் முதலாக 1993 நடித்தார். இதனை அடுத்து 1994 மலையாள படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

மேலும் 1994 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான தொட்டாசிணுங்கி படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தை மிகவும் அற்புதமான முறையில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் தமிழில் காதல் கோட்டை, சூரிய வம்சம், மறுமலர்ச்சி, சொர்ணமுகி, நினைத்தேன் வந்தாய், மூவேந்தர், நீ வருவாய் என போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கு ஏராளமான ரசிகைகள் இருக்கிறார்கள்.

மேலும் தமிழில் உச்சகட்ட கதாநாயகராக திகழ்ந்த பல நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை தேவயானி 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணத்திற்கு பெற்றோர் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்த போதும் நண்பர்களின் முன்னிலையில் திருமணத்தை செய்து கொண்ட இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

தொட்டா சிணுங்கி படத்தில் நீச்சல் உடையில்..

திரைப்படங்களில் நடிக்க வந்த புதிதில் சற்று கவர்ச்சியாக நடித்த நடிகை தேவயானி ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து குடும்ப பங்கினியான கதாபாத்திரங்களில் புடவை சகிதமாக நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சமயத்தில் நான் மார்டன் உடைகளை அணிந்து கொண்டு நடித்த ஒரே திரைப்படம் தொட்டாசிணுங்கி திரைப்படம் தான் என்று சொல்லி இருக்கிறார்.

தேவயானியின் ஓப்பன் டாக்..

மேலும் தொட்டா சிணுங்கி படத்தில் நடிக்கும் போது தான் மாடன் உடையில் நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் என்னை அழகாக இருப்பதாக கூறினார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னுடைய உள் உணர்வு அடிப்படையில் எனக்கு அப்படியான உடைகளை அணிந்து கொண்டு நடிக்க விருப்பம் இல்லை என்ற குண்டை போட்டார்.

இதனை அடுத்து அந்த தொட்டாசிணுங்கி திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடிக்கும் போது தனக்குள் உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. எனக்குள் அந்த உறுத்தலோடு தான் அந்த காட்சியில் நடித்தேன் என்ற உண்மையை ஓப்பனாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது தான் உண்மை எனக்கு அது போன்ற உடையை அணிந்து திரைப்படங்களில் நடிப்பதற்கு விருப்பம் இல்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கும் நடிகை தேவயானியின் ஓப்பன் டாக் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை அடுத்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் இவர் திரையுரையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள சற்று கவர்ச்சியாக நடித்ததை மறந்து விட்டாரா? என்பது போன்ற கேள்விகளை முன் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் பின் நாளில் குடும்ப பங்கினியாக நடித்த அவரை பாராட்டியும் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version