போன் எடுத்ததும் இதை சொன்னா கடுப்பாகிடுவேன்.. நடிகை தேவயானி ஆவேசம்..!

தமிழ் திரை உலகில் காதல் கோட்டை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை தேவயானி ஹோம்லி லுக்கில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர்.

1974-ஆம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் சுஷ்மா என்பதாகும். திரை உலகில் நடிப்பதற்காக தன் பெயரை தேவயானி என்று மாற்றிக் கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் ஹிந்தி மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை தேவயானி..

நடிகை தேவயானியை பொறுத்த வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த பல நடிகர்களோடு இணைந்து நடித்திருக்க கூடிய இவர் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் அசத்தினார்.

சின்னத்திரை பெரிய திரை என்று இரட்டைக் குதிரையில் பயணித்து வந்த இவர் நான் ஸ்டாப் கூரியரின் இனிமே இது தான் இது மட்டும்தான் எனும் விளம்பர படத்திலும் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

திரைப்படங்களில் இழுத்து போட்டி நடித்து வந்த நடிகை இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். இவரது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததை அடுத்து நண்பர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு இனியா பிரியங்கா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள்.

தமிழில் தொட்டா சிணுங்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் காதல் கோட்டை கமலியாக ரசிகர்களின் மனதில் நுழைந்து சிவசக்தி, விவசாயி மகன், காதலி, பெரிய இடத்து மாப்பிள்ளை, சூரிய வம்சம் போன்ற படத்தங்களின் மூலம் மிகவும் ஃபேமஸானார்.

இதனை அடுத்து நினைத்தேன் வந்தாய், மூவேந்தர், செந்தூரம், என் உயிர் நீ தான், நீ வருவாய் என, நிலவே முகம் காட்டு, பாட்டாளி போன்ற படங்களில் நடித்த இவர் ஆனந்தம், சுந்தர புருஷன், தென்காசி பட்டணம் போன்ற படங்களிலும் நடித்து அசத்தியவர்.

போன் எடுத்ததும் அதைச் சொன்னா..

திருமணத்துக்குப் பிறகு அதிகளவு திரைப்படங்களில் நடிக்காமல் குடும்பத்தில் கவனத்தை செலுத்தி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வதோடு பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை தேவயானி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது தொலைபேசி எடுத்ததும் ஒன்னும் இல்லை சும்மாதான் கூப்பிட்டேன் என்று யாராவது சொன்னால் நான் கடுப்பாகிவிடுவேன்.

ஏனென்றால் ஏதாவது ஒரு விஷயமாகத்தான் தொலைபேசியில் அழைக்கிறார்கள். எடுத்தவுடனே ஒன்றுமில்லை என்று கூறினால் எதிர்மறையான விஷயம் அங்கே முன் நின்று விடுகிறது.

கடுப்பாகிடுவேன் தேவயானி ஆவேசம்..

அதன் பிறகு எதை பேசினாலும் எதிர்மறையாகத்தான் அமையும். அதனால் எடுத்தவுடன் ஒன்றும் இல்லை சும்மாதான் கூப்பிட்டேன் என்று யாராவது சொன்னால் கடுப்பாகிடுவேன்.

இதனை நான் நிறைய பேரிடம் சொல்லி இருக்கிறேன். ஆனாலும் சிலர் மீண்டும் மீண்டும் இதே தான் செய்கிறார்கள். இது எனக்கு கடுப்பாக இருக்கிறது என பேசி இருக்கிறார் நடிகை தேவயானி.

உண்மையில் தேவயானி கூறுவதில் உண்மை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். எப்போதும் எதிர்மறையாக பேசுவதை விடுத்து நேர்மறையாக பேசுவதால் அன்றைய நாள் மிகச்சிறந்த நாடாக அனைவருக்கும் அமையும்.

எனவே இது மாதிரி தொலைபேசியில் பேசி எதிர்மறையாக அந்த நாளை மாற்றுபவர்கள் கட்டாயம் இந்த நிலையை மாற்றிக் கொள்வது மிகவும் சிறப்பு என்று ரசிகர்கள் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த காரணத்தால் தேவயானி கடுப்பாகிவிடுவார் என்ற விஷயத்தையும் அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version