தென்னை மரத்தடியில் இயக்குனருடன் தேவயாணி செய்த வேலை.. பார்த்து கடுப்பான சரத்குமார்..!

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. ஹோம்லி லுக் நடிகையாக ரசிகர்கள் மனம் கவர்ந்த தேவயானி, சினிமாவில் கவர்ச்சியாக நடிக்காமல் நல்ல குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து, ரசிகர்கள் மனம் கவர்ந்தார்.

தேவயானி

குறிப்பாக சூரிய வம்சம், காதல் கோட்டை, தொடரும், மூவேந்தர், தென்காசி பட்டணம், நினைத்தேன் வந்தாய், கிழக்கும் மேற்கும், நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், பிரண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் தேவையானி நடிப்பு, மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படங்களாக இருந்தன.

டைரக்டர் ராஜகுமாரன்

இந்நிலையில் ஒரு காலகட்டத்தில், அவர் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு டைரக்டர் ஆன ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

செய்யாறு பாலு

அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவம் குறித்து, சினிமா மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு நேர்காணல் ஒன்றில் கூறியதாவது,

விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. இந்த படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்தார். சரத்குமாரின் தம்பியாக சீயான் விக்ரம், சரத்குமார் மனைவியாக குஷ்பூ, சரத்குமாருக்கு ஜோடியாக தேவயானி நடித்தார்.

சரத்குமார்

இந்த படத்தில் தேவயானி நடிகை தேவயானி கேரக்டரிலேயே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரத்குமார், விக்ரம் வந்து விட்டனர். ஆனால் மணிக்கணக்கில் அவர்கள் காத்திருந்தும் அவர்களுக்கான ஷாட்எடுக்க டைரக்டர் அவர்களை அழைக்கவில்லை.

தென்னை மரத்தடியில்

இதனால் குழப்பமான சரத்குமார், அங்கிருந்து அசோசியேட் டைரக்டரை அழைத்து எங்கே உங்க டைரக்டர் என்று கேட்டார். அப்போது அவர் பின்னால் தென்னை மரத்தடியில், ஹீரோயின் தேவயானியை வைத்து அவர் தனியாக ஷாட் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

நாங்கள் வந்து இவ்வளவு நேரமாக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆத்திரம் அடைந்த சரத்குமார், அங்கே நேரில் சென்று பார்த்த போது, தென்னை மரத்தடியில் தேவயானியை வைத்து காட்சி எடுத்துக்கொண்டிருந்த ராஜகுமாரனை, சரத்குமார் இரண்டு வாங்கு வாங்கி இருக்கிறார். இதனால் அந்த படப்பிடிப்பில் அடிதடியாகி பயங்கர பிரச்னை ஏற்பட்டது.

சமாதானம் பேசிய தேவயானி

படப்பிடிப்பு அத்துடன் பிரேக்கப் ஆகிவிடும், படமே நின்றுவிடும் என்ற சூழ்நிலை உருவானது. அதன்பிறகு தேவயானி பேசி, சரத்குமாரை சமாதானம் செய்தார். இந்த சம்பவத்துக்கு பிறகுதான் ராஜகுமாரனும் தேவயானியும் காதலிக்கின்றனர் என்ற விஷயமே வெளிச்சத்துக்கு வந்தது.

அதன் பிறகு ராஜகுமாரன், தேவயானி காதலிக்கும் தகவலை அறிந்த தேவயானியின் பெற்றோர் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி தேவயானியும் ராஜகுமாரனும் திருமணம் செய்து கொண்டனர் என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

டைரக்டர் பார்த்த வேலை

தென்னை மரத்தடியில் இயக்குனர் ராஜகுமாரன் தேவயாணியை வைத்து தனியாக ஷாட் எடுத்துக்கொண்டு இருந்ததால், பார்த்து கடுப்பான சரத்குமார் பயங்கர டென்சனாகி இருக்கிறார். ஆனால் அதற்கு பிறகும் படப்பிடிப்பு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version